Breaking

டிசம்பர்-07. செவ்வாய் கிரகத்தில் கார்பன் டை ஆக்சைடு, சனிக் கிரகத்தில் மீத்தேன் வாயு இருப்பதை கண்டறிந்த டச்சு வானியல் அறிஞர்- ஜெரித் பியேதர் குயூப்பர் (Gerrit Pieter Kuiper) மறைந்த தினம்.

                                                                           






இன்று நினைவு நாள்:- டிசம்பர்-07.



செவ்வாய் கிரகத்தில் கார்பன் டை ஆக்சைடு, சனிக் கிரகத்தில் மீத்தேன் வாயு இருப்பதை கண்டறிந்த டச்சு வானியல் அறிஞர்- ஜெரித் பியேதர் குயூப்பர் (Gerrit Pieter Kuiper) மறைந்த தினம்.

பிறப்பு:-

டிசம்பர்-07, 1905 ஆம் ஆண்டு, ஹாலந்தில் உள்ள ஹெரன்காஸ்பெல் கிராமத்தில்  பிறந்தார்.
இவர் சிறு வயதிலேயே வானியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.வெறும் கண்ணாலேயே நட்சத்திரங்களை மிக நுட்பமாக பார்க்கும் திறன் பெற்றிருந்தார்.
தனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு லெய்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 
பிறகு, வானியலில் பட்டம் பெற்றார். இரட்டை நட்சத்திரங்கள் (Binary Stars) குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். 

பணிகள்:-

அமெரிக்கா சென்றவர், கலிபோர்னியாவில் உள்ள லிக் வானிலை ஆய்வகத்தில் ஃபெலோவாக பணிபுரிந்தார்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு ஹார்வர்டு கல்லூரி ஆய்வகத்தில் இணைந்தார். பின்னர், சிகாகோ பல்கலைக்கழகத்தின் யார்கஸ் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். 
அங்கு நடந்த பல்வேறு வானியல் ஆய்வுகளில் பங்கேற்று பல உண்மைகளைக் கண்டறிந்தார். 
இந்தக் கண்டுபிடிப்புகள்கோள் அறிவியல் துறை முன்னேற வழிகோலின. 
சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் துறைப் பேராசிரியராகப் பதவி ஏற்றார். 

ஆராய்ச்சிகள்:-



தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, பல இரட்டை நட்சத்திரங்களைக் கண்டறிந்தார்.
செவ்வாய் கிரகம், சூரிய குடும்பம் குறித்த ஆய்வுகளில் 3 ஆண்டுகாலம் ஈடுபட்டார்.
நுண்ணோக்கி உதவியுடன் பல்வேறு வானியல் உண்மைகளைக் கண்டறிந்தார். 
யுரேனஸ், நெப்டியூன் கிரகங்களின் துணைக் கோள்களான மிரான்டா, நீரிட் ஆகியவற்றைக் கண்டறிந்தார். 
செவ்வாய் கிரகத்தில் கார்பன் டை ஆக்சைடு இருப்பதையும், சனிக் கிரகத்தில் மீத்தேன் வாயு இருப்பதையும் கண்டறிந்தார்.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து எரிகோள்களின் ஒளியியல் தன்மைகள் குறித்த ஆய்வுகளை வழிநடத்தினார். 
மேலும்  கார்ல் சீகனுடன் இணைந்து விமானப்படையின் ரகசிய அணு ஆயுதத் திட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
வான்வெளியில் காற்றில் பரவும் அகச்சிவப்பு கதிர்கள் குறித்த ஆராய்ச்சியின் முன்னோடி இவரே ஆவார்.
அரிசோனா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது, அங்கு ஆய்வகம் நிறுவினார். 
நிலவில் மனிதன் இறங்கும் அப்போலோ திட்டத்துக்காக, நிலவில் இறங்க வேண்டிய இடத்தை அடையாளம் காண உதவினார். 

விருதுகள்:-

குயூப்பர் 1947 இல் பிரான்சு வானியல் கழகத்தின் பிரிக்சு யூலேசு ஜான்சன் விருது பெற்ரார்.
1959 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் என்றி நோரிசு விரிவுத் தகைமை பெற்றார்.
1971 இல் இவர் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தில் இருந்தும் பிராங்ளின் நிறுவனத்தில் இருந்தும்கெப்லர் பொற் பதக்கம் பெற்றார்.

மறைவு:-

நவீன கோள் அறிவியலின் தந்தை என்று போற்றப்பட்ட
இவர், டிசம்பர்-23, 1973 ஆம் ஆண்டு, மெக்சிகோவில்
மரணமடைந்தார். 



சிறப்புகள்:-

1776 குயூப்பர் சிறுகோள், (குயூப்பர் அறிவன் குழிப்பள்ளம், 
குயூப்பர் நிலாக் குழிப்பள்ளம், 
குயூப்பர் செவ்வாய்க் குழிப்பள்ளம்) ஆகிய குழிப்பள்ளங்களும் இப்போது இயக்கத்தில் இல்லாத குயூப்பர் காற்ருவெளி வன்காணகமும் இவரது பெயரால் அழைக்கப்படுகின்றன.

No comments:

Powered by Blogger.