டிசம்பர்-08. சார்க்-தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு/சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC)
சார்க் துவக்கப்பட்ட தினம்.
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு/South Asian Association for Regional Cooperation, SAARC)
தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான கூட்டமைப்பு சார்க் என்று அழைக்கப்படுகிறது.
இந்த அமைப்பில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
தெற்காசிய நாடுகளிடையேயான ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் 1940-களிலேயே தொடங்கிவிட்டது.
ஏப்ரல் 1947-ல், டெல்லியில் நடந்த ஆசிய நாடுகளுக்கிடையேயான உறவு தொடர்பான மாநாடு, 1950-ல் பிலிப்பைன்ஸில் நடந்த பாகியோ மாநாடு, 1954-ல் இலங்கையில் நடந்த கொழும்பு அதிகாரங்கள் மாநாடு ஆகிய மாநாடுகளில் இதற்கான யோசனைகள் விவாதிக்கப்பட்டன.
தொடக்கத்தில் இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற இந்தியாவும் பாகிஸ்தானும் தயக்கம் காட்டின.
தெற்காசியாவில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து தனக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் என்று இந்தியாவுக்குச் சந்தேகம் இருந்தது.
அதேபோல், இந்த நாடுகளில் இந்தியத் தயாரிப்புகளின் வர்த்தகம் பரவுவதன் மூலம், தனக்கு பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் பாகிஸ்தானிடம் இருந்தது. எனினும், தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்கள், நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
1983-ல் டெல்லியில் இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டில், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த இறுதிமுடிவு எடுக்கப்பட்டது.
1985 டிசம்பர் 8-ல் டாக்காவில் சார்க் அமைப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.


No comments: