Breaking

ஒத்திவைக்கப்பட்ட மின்வாரிய பணிகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு!





டிசம்பர் 2 ஆம் தேதியன்று நடைபெறவிருந்த தோவு டிசம்பர் 12ஆம் தேதியன்றும், டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவிருந்த தோவு டிசம்பர் 13ஆம் தேதியன்றும் நடைபெற உள்ளது.
தொடர்ந்து, டிசம்பர் 4ஆம் தேதி அன்று நடைபெற வேண்டிய தேர்வு டிசம்பர் 14ஆம் தேதியும், டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற வேண்டிய தேர்வு டிசம்பர் 16ஆம் தேதியும், டிசம்பர் 6ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 17ஆம் தேதியும், டிசம்பர் 7ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 18ஆம் தேதியும் உடற்திறன் தோவு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் எவ்வித மாற்றங்களும் இன்றி அதே தேதியிலேயே நடைபெறும். பங்கேற்பாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியில் குறித்த நேரத்தில் தவறாமல் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.