Home
DECEMBER
டிசம்பர்-10. கணினி இயந்திரத்தில் பகுப்புப் பொறியியளில் படிமுறைத் தீர்வு எழுதிய முதல் பெண் கணினி புரோகிராமர்- அடா லவ்லேசு(Augusta Ada King, Countess of Lovelace) பிறந்த தினம்.
டிசம்பர்-10. கணினி இயந்திரத்தில் பகுப்புப் பொறியியளில் படிமுறைத் தீர்வு எழுதிய முதல் பெண் கணினி புரோகிராமர்- அடா லவ்லேசு(Augusta Ada King, Countess of Lovelace) பிறந்த தினம்.
07:18
Read
இன்று பிறந்த நாள்:- டிசம்பர்-10.
கணினி இயந்திரத்தில்
பகுப்புப் பொறியியளில்
படிமுறைத் தீர்வு எழுதிய முதல் பெண் கணினி புரோகிராமர்-
அடா லவ்லேசு(Augusta Ada King, Countess of Lovelace) பிறந்த தினம்.
பிறப்பு:-
டிசம்பர்-10, 1815 ஆம் ஆண்டு,
லண்டன், இங்கிலாந்தில் பிறந்தார்.
தனது நேரத்தை கணிதத்திலும், இசையிலும் செலவிட்டார்.
கண்டுபிடிப்புகள்:-
1828 ல், தனது 13 வது வயதில் பறக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.
1833 ஆம் ஆண்டு அடா தனது 17 வயதில் கணினி உலகின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ் பாப்பேஜ்ஜியை சந்தித்தார். இவர் கணித அறிவு மற்றும் திறன் ஆய்வில் சிறந்து விளங்கினார். பின், பாப்பேஜ் உடன் நட்பு தொடர்ந்தது. 1834 ஆம் ஆண்டு “வேறுபாட்டுப் பொறி” (Difference Engine) என்ற கணக்கிட்டு இயந்திரத்தை முடிக்கும் முன்பே அவர் தனது இரண்டாவது முயற்சியாக பகுப்பாய்வு இயந்திரத்தை (Analytical Engine) உருவாக்க முடிவு செய்தார். பாபேஜ்க்கு வெளிநாட்டு ஆதரவு கிட்டியது. 1842 ஆம் ஆண்டில், இத்தாலிய கணிதவியலாளர், லூயிஸ் மினிப்ரே தனது பகுப்பாய்வு இயந்திரத்தின் (Analytical Engine) ஆய்வுகளை வெளியிட்டார். லூயிஸ் மினிப்ரேவின் ஆய்வை தொடர்ந்து பாபேஜ்யும், அடாவும் இணைந்து பகுப்பாய்வு இயந்திரத்தின் முதல் கணனி நிரலை எழுதினார்.
இது அடாவிற்கு நீடித்த புகழைத் தேடிக்கொடுத்தது. அடா தன்னை ஒரு ஆய்வாளர் என்றும் மீவியர்பியன் (Analyst & Metaphysician) என்றும் முன்நிலைப்படுத்திக்கொண்டார். பாப்பேஜ்யின் இயந்திர திட்டங்களை புரிந்து அல்கோரிதங்களை எழுதினார். மேலும், இது பொது நோக்கத்திற்காக கணினி என்றும் மிக சிக்கலான செயல்பாடுகளை (Complex Problem) தீர்க்க உதவும் என்றும் கூறினார்.
இறப்பு:-
நவம்பர்-27, 1852 ஆம் ஆண்டு,
மேரில்போர்ன், லண்டன், இங்கிலாந்தில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
இவருக்கு மதிப்பளிக்கும் வகையில் அமெரிக்க இராணுவம் வடிவமைத்த நிரலாக்க மொழிக்கு "அடா நிரலாக்க மொழி" எனப் பெயரிடப்பட்டது.
டிசம்பர்-10. கணினி இயந்திரத்தில் பகுப்புப் பொறியியளில் படிமுறைத் தீர்வு எழுதிய முதல் பெண் கணினி புரோகிராமர்- அடா லவ்லேசு(Augusta Ada King, Countess of Lovelace) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
07:18
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
07:18
Rating: 5
Tags :
DECEMBER


No comments: