10.12.2019 இன்றைய ராசிபலன்கள்..
மேஷம்
கிரகங்களின் சாதகமான பார்வையினால் நற்பலன்களை பெறுவீர்கள்.. நினைத்ததை நினைத்தவாறு முடித்து காட்டுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.
மிதுனம்
சிறு தொலைவு பயணம் மேற்கொள்வீர்கள். நண்பர்கள் வட்டம் விரிவடையும். உணவு பழக்கவழக்கத்தில் கவனம் தேவை.
கடகம்
இரகசியங்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாகனப்போக்குவரத்தில் கவனம் அவசியம்.
சிம்மம்
மனசஞ்சலத்தால் அவதிப்படுவீர்கள். மன அமைதிக்கு தியானம், மெடிடேசன் செய்யவும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். நிதி விவகாரங்களில் கவனம் அவசியம்.
கன்னி
கனவுகளை நனவாக்குவீர்கள். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். விருந்து விசேஷங்களில் பங்கேற்பீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
துலாம்
நிதிவிவகாரங்களில் அதிருப்தியான நிலை நிலவுவதால் கவனம் அவசியம். எதிர்மறை எண்ணங்களை அகற்றுவதனால் மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம். வார்த்தைகளில் நிதானப்போக்கு அவசியம்
விருச்சிகம்
மனஅழுத்தத்தால் அவதிப்படுவீர்கள். மன அமைதிக்கு தியானம் செய்ய வேண்டும். நேர்மறைத்தன்மையுடன் இருப்பதால் வெற்றி கிட்டும்.
தனுசு
கடந்தகால நினைவுகளை அசைபோடுவீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாகனப்போக்குவரத்தில் கவனம் அவசியம்.
மகரம்
கிரகங்களின் சாதகமான பார்வையினால் நற்பலன்கள் ஏற்படும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கும்பம்
மனஉறுதியுடன் மற்றவர்கள் செய்ய தயங்கும் காரியங்களை அநாயசமாக செய்து முடிப்பீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.
மீனம்
மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கவும். உணவு விவகாரங்களில் அதிக கவனம் வேண்டும்.


No comments: