விண்வெளி குப்பைகளிலிருந்தும், விண்கற்கள் போன்ற அபாயத்திலிருந்தும் செயல்பாட்டில் உள்ள இந்திய செயற்கைகோள்களை பாதுகாக்க "நேத்ரா" எனும் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்
விண்வெளி குப்பைகளிடமிருந்து இந்திய செயற்கைகோள்களை காப்பாற்ற 33 கோடியே 30 லட்சத்து ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது.
பல நாடுகள் தற்போது பல்வேறு விண்வெளி ஆராய்ச்சியில் மும்னுரமாக ஈடுபட்டு வருகின்றன.கடந்த 50 வருடங்களாக இது போன்று பல்வேறு நாடுகள் மேற்கொண்ட விண்வெளி ஆராய்ச்சியால், தற்போது புவியின் சுற்றுவட்ட பாதையில் பழைய செயற்கைகோள்களின் பாகங்கள் மற்றும் பல விண்வெளி குப்பைகள் அதிகரித்து காணப்படுகிறது. இவையெல்லாம் சேர்ந்து செயல்பாட்டில் உள்ள செயற்கைகோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உருவெடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதுபோன்ற விண்வெளி குப்பைகளிலிருந்தும், விண்கற்கள் போன்ற அபாயத்திலிருந்தும் செயல்பாட்டில் உள்ள இந்திய செயற்கைகோள்களை பாதுகாக்க "நேத்ரா" எனும் திட்டத்தை ரூ 400 கோடி செலவில் இஸ்ரோ செயல்படுத்துகிறது.
இத்திட்டத்திற்கு மானியம் வழங்குவதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெற்றுள்ளார்.


No comments: