இந்தியர்களின் சராசரி வாழ்நாள் வி,ட அமெரிக்கர்கள் வாழ் நாட்கள் 12 ஆண்டுகள் அதிகமாக உள்ளது இதற்கான காரணங்கள் பின்னணியும் என்ன..
இந்தியாவில் நம் அரசு எடுத்த கணக்கியல் தகவல்படி 2018 இல் இந்தியனின் சராசரி வாழ்நாள் 68.8. பெண்களின் சராசரி வயது 70.3 ஆகும். ஆண்களின் வயது 67.4 சென்ற ஆண்டு கூட 2017இல் சராசரி வயது இதை விட குறைவுதான் அதாவது 68 தான். ஆனால் அமெரிக்காவில் மனிதனின் சராசரி வயது 2018ல் பெண்ணுக்கு 84 வயது ஆண்களுக்கு 80 வயது ஆகும். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்து இருப்பான் என எண்ணுகிறீர்கள் அப்போதைய நிலை என்ன. மனிதனின் வாழ்நாள் எவ்வளவு இருந்தது. 1500 முதல் 1800 வரை இந்தியாவிலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கூட மனிதனின் வாழ்நாள் என்பது 30 முதல் 40 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் இன்று இந்தியரை விட அமெரிக்கரின் வயது 12 அதிகம் அவர்கள் நம்மை விட இன்னும் 12 ஆண்டுகள் வாழ்கின்றனர் என்றால் இதன் காரணம் அவர்களின் மருத்துவ கண்டுபிடிப்புகள் மட்டும் தான் மிக முக்கியமாகும். மருந்துகள் கண்டுபிடிப்பும், அதன் சாதனைகளும் உலகில் பிங்க் புரட்சி ஆகும். இதனால் தான் நம் ஊரில் மட்டுமல்ல உலகம் முழுமைக்கும், கண்டுபிடிக்கப்பட்ட நவீன மருந்துகள் தான் மனிதனை வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றி நீண்ட ஆயுள் வரை வாழ வழிவகுத்துள்ளது. இந்த உலகில் நாம் நலமுடன் வாழ விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களால் தான் காரணம். இவர்களால் நவீன மருந்துகளால் கண்டுபிடிப்பதால்,நாம் காப்பாற்றப்பட்டு உலகம் முழுதும் வாழ்கிறோம்.
இதன் வளர்ச்சியானது நவீன மருத்துவத்தின் தந்தை 2400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹிப்போகிரேட்டஸ் தான். அதன் பின்னர் தொடர்ந்து மருத்துவ கண்டுபிடிப்புகள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த லூயி பாஸ்டியர் கண்டுபிடிப்புகளான தடுப்பூசி தான். மனித உயிரை காப்பாற்றிய வாழ்நாளை அதிகரித்தது. ஆந்தராக்ஸ், காலரா, ராபிஸ், அம்மை போன்ற வைரஸ் நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தார். அலெக்சாண்டர் பிளமிங் பென்சிலினை கண்டுபிடித்தார். பாக்டீரியா கட்டுப்படுத்த எதிர் உயிர் மருந்து கண்டுபிடித்தார். இதன்மூலம் வியாதிகளில் இருந்து மனிதன் விடுபட முடிந்தது போல, இன்று மருத்துவர்களும், நோயாளிகளும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு செயல் நடந்தேறி இருக்கிறது. அதுதான் சிதைந்த செல்களை ஒரே ஒரு ஊசியின் மூலம் சரிசெய்து விரைவில் மீண்டும் வளர வைப்பது ஆகும்.
பிரிட்டிஷ் கொலம்பியா Okanagan cmpu பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் keekyoung என்ற பேராசிரியர்,முகமது கமால் என்ற ஆராய்ச்சி மாணவர் இணைந்து இந்த ஊசியை கண்டுபிடித்துள்ளனர் இது உடலின் தற்காப்பு சக்தியும் ஒத்துழைப்பதால் சாத்தியமாகியது என்று கூறுகின்றனர்.
No comments: