டிசம்பர்-14. சோவியத் அணுக்கருத் திட்டம் செயற்பாட்டாளர்-ஆந்திரே திமித்ரியேவிச் சாகரவ் (Andrei Dmitrievich Sakharov) மறைந்த தினம்.
இன்று நினைவு நாள்:- டிசம்பர்-14.
சோவியத் அணுக்கருத் திட்டம் செயற்பாட்டாளர்-ஆந்திரே திமித்ரியேவிச் சாகரவ் (Andrei Dmitrievich Sakharov) மறைந்த தினம்.
பிறப்பு:-
மே 21, 1921
மாஸ்கோவில் பிறந்தார்.
சாகரவ் மிகச்சிறந்த அறிவியலாளராக இருந்தார். இரண்டாம் உலகப் போரின் போது கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளிவந்த சாகரவ் கட்டாய படைத்துறைப் பணிக்கு மாறாக அரசுக்கான இரகசிய அறிவியல் ஆய்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.1950களில் சோவியத்து ஐதரசன் அணுகுண்டைத் தயாரிக்க உதவினார்.
சோவியத் ஒன்றியத்தின் அணுவாயுதத் திட்டத்தின் மூன்றாம் கருத்துரு எனக் குறியீடு இடப்பட்ட அணுவெப்பாற்றல் ஆயுதங்களின் வடிவமைப்பிற்காக மிகவும் அறியப்பட்டார்.
பின்னதாக சோவியத் ஒன்றியத்தில் மனித உரிமைகளுக்காகவும் குடிமைச் சீர்திருத்தங்களுக்காகவும் போராடினார்.
விருதுகள்:-
இவரது முயற்சிகளுக்காக 1975 இல் சாகரவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
சோசலிசத் தொழிலாளர் நாயகர்
(1953 1955 1962)
இசுடாலின் பரிசு (1953)
லெனின் பரிசு (1956)
எலியட் கிரெசன் பதக்கம் (1985)
மறைவு:-
டிசம்பர்-14 1989 ஆம் ஆண்டு
மாஸ்கோவில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
இவரைப் போற்றும் வண்ணம் ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆண்டுதோறும் மனித உரிமைகளுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட நபர்களுக்கும் அமைப்புகளுக்கும்
சாகரவ் பரிசு வழங்கி வருகின்றது.


No comments: