டிசம்பர்-14. வானியலிலும், கோள்கள் தொடர்பிலும் துல்லியமான, விரிவான ஆய்வு செய்தவர்- டைக்கோ பிராகி (Tycho Brahe) பிறந்த தினம்.
இன்று பிறந்தநாள்:- டிசம்பர்-14.
வானியலிலும், கோள்கள் தொடர்பிலும் துல்லியமான, விரிவான ஆய்வு செய்தவர்-
டைக்கோ பிராகி (Tycho Brahe) பிறந்த தினம்.
பிறப்பு:-
டிசம்பர் -14,1546
ஆம் ஆண்டு பிறந்தார்.
சுவீடன் நாட்டில் ஸ்கேனியா என்னும் இடத்தைச் சேர்ந்தவர். இவர், அவரது வாழ்க்கைக் காலத்திலேயே ஒரு வானியலாளராகவும், இரசவாதியாகவும் பெரிதும் அறியப்பட்டவர்.
இவருக்கு, ஆய்வு நிலையம் ஒன்று அமைப்பதற்காக, வென் என்னும் தீவில் நிலமும், நிதியும் நன்கொடையாகத் தரப்பட்டது.
இங்கே பிரா ஒரு பெரிய வானியல் கருவியொன்றைப் பொருத்திப் பல அளவீடுகளை எடுத்தார்.
ஒரு வானியலாளராக, டைக்கோ, கோப்பர்நிக்காஸ் முறையின் வடிவவியல் பயன்களையும், தொலமிய முறையின் மெய்யியல் பயன்களையும் இணைத்து டைக்கோனிய முறை என்னும் அண்டத்தின் மாதிரியொன்றை உருவாக்கினார்.
மறைவு:-
அக்டோபர்-24, 1601
பிராகாவில் மரணமடைந்தார்.


No comments: