Breaking

டிசம்பர்-18. வானொலி ஒலிபரப்பில் நவீன அதிர்வெண் பண்பலைபண்பேற்றம் (FM) கண்டுபிடித்த அமெரிக்க மின் பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்-எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் (Edwin H. Armstrong) பிறந்த தினம்.



இன்று பிறந்த நாள்:- டிசம்பர்-18.

வானொலி ஒலிபரப்பில் நவீன அதிர்வெண் பண்பலைபண்பேற்றம் (FM) கண்டுபிடித்த 
அமெரிக்க மின் பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்-எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் (Edwin H. Armstrong) பிறந்த தினம்.


பிறப்பு:-

டிசம்பர்- 18, 1890 ஆம் ஆண்டு,
ஜெல்ஜி, மாண்காட்டன், நியூயார்க் நகரம், யூ.எஸ்.ஏவில் பிறந்தார்.
இவரின் அப்பா பெயர் ஜான், அம்மாவின் பெயர் எமிலி ஆகும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தீட்டா ஜி பற்றிய பாடத்தை எடுத்துப் படித்தார்.
1913 ஆம் ஆண்டு, கொலம்பியா பல்கலை கழகத்தில் இருந்து, மின் பொறியியலில் பட்டம் பெற்றார்.


பணிகள்:-

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார்.
பின்பு முதல் உலகப்போரின் போது சமிக்ஞை அதிகாரியாக சேவை செய்தார்.

கண்டுபிடிப்புகள்:-

எப்.எம் வானொலி:-

எப்.எம் வானொலியைக் கண்டுபிடித்த இவர் 1935 ஆம் ஆண்டு நியூஜெர்ஸி மாநிலத்தில் ஒலிபரப்பு செய்தார். அதன் பின்னர் இவரின் தயாரிப்பைப் பல தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டன. 
இவர் உலகின் முதல் எப்.எம் ஒலிபரப்பிற்க்காக காப்புரிமை
பெற்றார். இவரின் மறுமீட்டாக்க மின்சுற்றுக்காக 1941ஆம் ஆண்டு காப்புரிமை கிடைத்தது. அதன் பின் இரண்டாவது முறை மேம்பட்ட மறுமீட்டாக்க மின்சுற்றுக்காக
1933 ஆம் ஆண்டும் காப்புரிமை பெற்றார். 1918ஆம் ஆண்டில் சூப்பர்ஹெடரோடைன்னை (Superheterodyne receiver) மேம்படுத்தினார்.

விருதுகள்:-

IEEE 
கௌரவ
பதக்கம் - (1917),
IEEE எடிசன் பதக்கம்-(1942) பெற்றார்.

இறப்பு:-

ஜனவரி-31, 1954 ஆம் ஆண்டு,
நியூயார்க் நகரம், யு.எஸ்.ஏவில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.