Home
DECEMBER
டிசம்பர்-18. பரிமாணக் கோட்பாட்டை அறிவித்து ஆய்வுகள் மேற்கொண்ட பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த உயிரியல் அறிஞர், கல்வியாளர்- ஜீன் பாப்டைசு லாமார்க்கு (Jean-Baptiste Pierre Antoine de Monet, Chevalier de Lamarck) மறைந்த தினம்.
டிசம்பர்-18. பரிமாணக் கோட்பாட்டை அறிவித்து ஆய்வுகள் மேற்கொண்ட பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த உயிரியல் அறிஞர், கல்வியாளர்- ஜீன் பாப்டைசு லாமார்க்கு (Jean-Baptiste Pierre Antoine de Monet, Chevalier de Lamarck) மறைந்த தினம்.
08:35
Read
இன்று நினைவு நாள்:-டிசம்பர்-18.
பரிமாணக் கோட்பாட்டை அறிவித்து ஆய்வுகள் மேற்கொண்ட
பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த உயிரியல் அறிஞர், கல்வியாளர்-
ஜீன் பாப்டைசு லாமார்க்கு (Jean-Baptiste Pierre Antoine de Monet, Chevalier de Lamarck) மறைந்த தினம்.
பிறப்பு:-
ஆகஸ்ட்-01, 1744 ஆம் ஆண்டு,
பேசென்டின், பிகார்டி, பிரான்சில் பிறந்தார்.
1750 களின் பிற்பகுதியில் ஏமியென்ஸ் கல்லூரியில் சேர்ந்தார்.
இயற்கையின் வரலாற்றில் ஆர்வம் கொண்ட அவர் மருத்துவத்தைப் படிப்பதென முடிவெடுத்தார்.
லாமார்க்கியன் படிவளர்ச்சிக் கொள்கை:-
லாமார்க் தனது உயிரியல் சார்ந்த ஆய்வுப்பணியில் இரண்டு கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். 1) வது கோட்பாடு விலங்குகளில் அவற்றின் தகவமைப்பு உருவாக சூழ்நிலையே காரணம் எனக்கூறினார். இதற்கு, உதாரணமாக, பாலூட்டிகளில் காணப்படும் பற்களின் அமைப்பையும், துள்ளெலிகளின் குருட்டுத்தன்மையையும், பறவைகளுக்கு பற்களில்லாமையையும் எடுத்து வைத்தார்.
2) கோட்பாடானது, விலங்குகளின்வா உடலமைப்பு மற்றும் உறுப்புக்களின் அமைப்பு ஆகியவை வாழ்வை சந்திப்பதற்கான இயக்கங்களுக்கு ஏற்றவாறு ஒரு ஒழுங்கமைப்பில் உள்ளது எனத் தெரிவிக்கிறார்.
உயிரியல் பரிணாமக் கோட்பாட்டைப் பற்றி சிந்தித்த முதல் உயிரியலாளராக இவர் இல்லாதிருப்பினும் உண்மையில் ஒரு இணக்கமான பரிணாம கோட்பாட்டை உருவாக்கியவர் இவரேயாவார்.
1800 ஆம் ஆண்டுகளில் தனது ஃப்ளோரியல் தொடர்பான தனது விரிவுரையில் பரிணாமத்தைப் பற்றிய தனது கோட்பாடுகளை கோடிட்டுக் காட்டினார். பிறகு வெளியிடப்பட்ட மூன்று ஆராய்ச்சி நுால்களில் இது தொடர்பான விரிவான விளக்கத்தை முன் வைத்தார், லாமார்க் பரிணாம இயக்கிகளாக அவருடைய முந்தைய பொது அறிவு மற்றும் இவாசியேக்கு முந்தைய தனது சொந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலான வேதியியல் அறிவு ஆகியவற்றைக் கொண்டு பல வழிமுறைகளைப் பயன்படுத்தினார், அவர் பரிணாமத்தின் பின்புலமாக உள்ள இரண்டு சக்திகளைப் பற்றி விளக்குவதற்கு இந்த வழிமுறைகளை பயன்படுத்தினார்; விலங்குகளை தனது இயல்பான நிலையிலிருந்து சிக்கலான வடிவங்களாக வரையறுக்கும் ஒரு சக்தியாகவும், மற்றும் அந்தந்த விலங்கினத்தின் உள்ளூர் சூழல்களுக்கு ஏற்றவாறு விலங்குகளின் தகவமைப்பு மாறி அமைதல் என்பன அவை, மேலும் இந்த இயக்கு சக்தியே ஒவ்வொரு விலங்கையும் வேறுபடுத்தி அறிதல் சாத்தியமாகிறது. அடிப்படைக் கோட்பாடுகளான இயற்பியல் பண்புகளிலிருந்து இந்த சக்திகள் விளக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் நம்பினார்.
இவர் உடலுருப்பு பற்றிய விதியை உருவாக்கியுள்ளார்.
இதன்படி அதிக பயன்பாட்டில் இருக்கும் உருப்புகள் நன்கு வளர்ச்சியுரும்.
பயன்படாத உருப்புக்கள் நாளடைவில் பயனிழந்து சிறுத்துப்போகும் என்றார்.
பதவிகள்:-
பிரெஞ்சு கல்விசார் நிறுவனத்தின் உறுப்பினராவதற்கான தகுதியைப் பெற்றார்.
நூல்கள்:-
1778 இல் தாவரவியளில்
ஃபுளோரே ஃபிரானகாய்சு
என்ற நுாலின் மூன்று பாகங்களை எழுதினார்.
மறைவு:-
டிசம்பர்-18, 1829 ஆம் ஆண்டு,
பாரிஸ், பிரான்சில் மரணமடைந்தார்.
டிசம்பர்-18. பரிமாணக் கோட்பாட்டை அறிவித்து ஆய்வுகள் மேற்கொண்ட பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த உயிரியல் அறிஞர், கல்வியாளர்- ஜீன் பாப்டைசு லாமார்க்கு (Jean-Baptiste Pierre Antoine de Monet, Chevalier de Lamarck) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:35
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:35
Rating: 5
Tags :
DECEMBER


No comments: