Breaking

டிசம்பர்-19. ஒளியின் வேகத்தை துல்லியமாகக் கணக்கிட்ட அமெரிக்க இயற்பியலாளர்- ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கேல்சன் (Albert Abraham Michelson) பிறந்த தினம்.

இன்று பிறந்த நாள்:- டிசம்பர்-19.

ஒளியின் வேகத்தை துல்லியமாகக் கணக்கிட்ட
அமெரிக்க இயற்பியலாளர்-
ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கேல்சன் (Albert Abraham Michelson) பிறந்த தினம்.


பிறப்பு:-

போலந்து நாட்டின் ஸ்டெரல்னோ என்ற ஊரில் டிசம்பர்-19, 1852 ஆம் ஆண்டு பிறந்தார்.
இவரது தந்தை சாமுவேல் மைக்கல்சன், தாயார் ரோசலியா ஆவார்கள்.
சான் பிரான்சிஸ்கோவில் தன்னுடைய பள்ளிப்படிப்பை பயின்றார். பொதுப்பள்ளிகளில் சேர்ந்து தன்னுடைய கல்வியைப் பயின்றார்.

பணிகள்:-

1869-ல் அமெரிக்கக் கப்பற்படை அகாதமியில் சிறப்புப்பிரிவு பணியாளராக  நியமிக்கப்பட்டார்.
பிறகு, இயற்பியல் பிரிவுகளான, ஒளியியல், வெப்பவியல், பருவகால இயல் முதலிய துறைகளையும் மற்றும் சித்திரம்வரைதலையும் கற்றுத் தேர்ந்தார். 1873-ல் பட்டப்படிப்பை முடித்துப் பட்டம் பெற்றார். அங்கேயே 1875 முதல் 1977 வரை இயற்பியல்மற்றும் வேதியல் போதிப்பவராகப் பணியாற்றினார்.1875-ல் 'கிளெவ்லாண்ட்' என்னும் இடத்தில்  பயனுறு அறிவியலுக்கான கேஸ் பள்ளியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1880 முதல் 82 வரை ஹெல்ம் ஹோல்ட்ஸ் என்ற அறிவியலறிஞரின் மேற்பார்வையில் பெர்லினிலும், பாரிசிலும் தன்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
1889 இல் கிளார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 
1892-ல் தொடங்கப்பட்ட சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

ஆய்வுகள்:-

அமெரிக்க குடியுரிமை பெற்று, இயற்பியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். 
1877 இல் 'அன்னபோலிஸ்' என்ற இடத்தில் இருந்தபோது வகுப்பில் அறிவியல் ஆய்வு ஒன்றினைச் செய்துகொண்டிருந்தபோது அதன் ஒரு பகுதியாக ஒளியின் வேகத்தைக் கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டார். 1867 இல் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வானியலறிஞர் 'அர்மெண்ட் பிசியூ' விண்மீன்களின் அளவை அளவிடக் குறுக்கீட்டு மானிஒன்றைப் பயன்படுத்த முயன்றார். ஆனால் மைக்கல்சனோ 1887 இல் தொடங்கி பல ஆய்வுகளில் ஈடுபட்டுப் பல ஆடிகளையும் ஒளி ஓரளவு ஊடுருவும் கண்ணாடிகளையும் 
பயன்படுத்தி ஒரே மூலத்திலிருந்து வெளிவரும் தனித்தனி ஒளிக்கதிர்களை
ஒன்றாக இணைப்பதற்கு ஒரு முறையை உருவாக்கினார். குறுக்கிடும் பல ஒளிக்கதிர்களை ஒருங்கிணைக்க அவை கடந்துவரும் 
தூரம், திசை, இவைகளைப் பொருத்தவகையில் அமையுமாறு ஒரு குறுக்கீட்டு மானி (Interferometer)
 ஒன்றை அமைத்தார்.

மைக்கல்சன்-மோர்லி பரிசோதனை:-

இந்த அண்டம் 
முழுவதும் திரவ வாயு 
நிலைக்கு இடைப்பட்ட ஈதர்என்ற கண்ணுக்குப் புலனாகாத ஊடகம் விரவியுள்ளதாக அறிவியலறிஞர்கள் கருதினர். இதன் வழியாகத்தான் ஒளி ஊடுருவிச் செல்வதாகவும் கூறினர். மைக்கல்சன், 
மார்லி என்பவரோடு இணைந்து L வடிவக் கருவி ஒன்றை இரண்டாகப் பிரித்து, ஒரே நீளமுள்ள வெவ்வேறு செங்குத்தான பாதைகளில் செலுத்தினார். பிறகு அவற்றை மீண்டும் ஒன்றாக இணைத்தார். ஈதர் என்ற ஊடகம் இருந்திருந்தால் அங்கங்கே அவற்றின் அடர்த்திகளுக்கேற்ப
செங்குத்தான பாதைகளில் சென்று திரும்பிய ஒளிக்கதிர்கள் மீண்டும் இணையும்போது சிறிதளவு நேர மாறுபாடு இருந்திருக்கும்,. ஆனால் அவ்வாறு ஏற்படவில்லை என்பது இவர்களின் ஆய்விலிருந்து தெரியவந்தது. அவ்வாறு ஏற்படாததால் ஈதர் என்ற ஊடகம் எல்லா இடத்திலும் இல்லை என்று நிரூபித்தனர். இந்த ஆய்வு "மைக்கல்சன்-மார்லி ஆய்வு" என்று புகழ் பெற்றது.

ஒளியின் திசை வேகம்:-

இவர், மிகக்குறைந்த செலவில் வெறும் ஆடிகளை வைத்தே தனது ஆய்வினை மேற்கொண்டு ஒளியின் திசைவேகத்தைத் துல்லியமாகக் கண்டறிவதில் 1878-ல் வெற்றிபெற்றார்.
1920 இல் வில்சன், 
சான் ஆன்டோனியா 
என்ற 22 மைல்களுக்கிடையேயான இரு குன்றுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் முற்றிலும் புதியதாக வடைவமைக்கப்பட்ட ஆடி அமைப்புகளை அமைத்து ஒளியின் திசைவேகத்தை மிகவும் துல்லியமாகக் கண்டறிந்தார்.( 299,940 km/s, or 186,380 mi/s) இவருடைய குறுக்கீட்டு மானியின் உதவியால் 
ஆல்பா ஆரியனிஸ்
என்ற வின்மீண் விட்டத்தை அளந்துகாட்டினார்.

பதவிகளும்,விருதுகளும்:-

1900 இல் அமெரிக்க இயற்பியல் கழகத் தலைவராக  நியமிக்கப்பட் டார்.
1903 இல் மேட்டூசி மெடல்,
1907 ஆம் ஆண்டு ஒளியியலில்  ஆய்வுகளுக்காக  நோபெல் பரிசு பெற்றார்.
1912 இல் பிராங்க்ளின் நிறுவனத்தின் எலியட் கிரைசன் பதக்கம், 
1916 இல் தேசிய அறிவியல் கழகத்தின் ஹென்றி ட்ரேப்பர் பதக்கம்,
1923 இல் ராயல் வானியல் கழகத்தின் தங்கப்பதக்கம் உட்பட பல்வேறு பரிசுகளைப் பெற்றார்.


மறைவு:-

அறிவியலுக்கான நோபெல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்ற இவர்,
மவுன்ட் வில்சன் வானியல் ஆய்வு மையத்தில் இணைந்து பணியாற்றினார். இறுதிவரை ஆய்வுகளில் ஈடுபட்ட இவர்,  மே-9, 1931 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.