Home
DECEMBER
டிசம்பர்-20. அறிவியல், வானவியல், வானியற்பியல் போன்ற துறைகளை மக்களிடையே பிரபலமாக்கிய அமெரிக்க அறிவியிலாளர்- கார்ல் எட்வர்ட் சேகன் (Carl Edward Sagan) மறைந்த தினம்.
டிசம்பர்-20. அறிவியல், வானவியல், வானியற்பியல் போன்ற துறைகளை மக்களிடையே பிரபலமாக்கிய அமெரிக்க அறிவியிலாளர்- கார்ல் எட்வர்ட் சேகன் (Carl Edward Sagan) மறைந்த தினம்.
08:39
Read
இன்று நினைவு நாள்:- டிசம்பர்-20.
அறிவியல், வானவியல், வானியற்பியல் போன்ற துறைகளை மக்களிடையே பிரபலமாக்கிய
அமெரிக்க
அறிவியிலாளர்-
கார்ல் எட்வர்ட் சேகன் (Carl Edward Sagan) மறைந்த தினம்.
பிறப்பு:-
நவம்பர்-09, 1934 ஆம் ஆண்டு,
புரூக்ளின், நியூயார்க், அமெரிக்காவில் பிறந்தார். நியு ஜெர்சியில் உள்ள பள்ளியில் ஆரம்பக்கல்வி படித்தார். தனது
ஐந்தாம் வயதிலே பொது நூலகத்தில் சேர்ந்து படிப்பிலும் ஆய்விலும் ஆர்வமாக இருந்தார்.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளங்கலை அறிவியல், முதுகலை அறிவியல் பயின்று ஆய்வுப் பட்டமும் பெற்றார்.
பணிகள்:-
1968 ஆம் ஆண்டு வரை ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டே ஆய்வுகள் செய்தார். பின்னர் கார்னல் பல்கலைக் கழகத்தில் வானியல் துறையில் பேராசிரியராகச் சேர்ந்தார்.
மேலும் தம் வாழ்வின் பெரும்பகுதியைக் கார்னல் பல்கலைக் கழகத்தில் ஆய்வுக்கான பணியில் ஈடுபட்டார். அங்கு கோள்கள் ஆய்வுப் படிப்பு ஆய்வகத்தில் இயக்குநராகப் பணி புரிந்தார்.
ஆராய்ச்சிகள்:-
கோள்களை நோக்கி மேற்கொள்ளப் பட்ட விண்வெளிப் பயண முயற்சியில் பங்களிப்பு குறிப்பிடும் அளவுக்கு இருந்தது. நிலவுக்குச் சென்ற அப்பல்லோ விண்வெளி வீரர்களிடையே தம் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். 1950 முதல் நாசா அமைப்புடன் தொடர்ந்து உறவு கொண்டு இருந்தார். வீனஸ் ஜூபிட்டர் புதன் ஆகிய கோள்களின் வெப்பநிலைகள் பற்றியும் கால மாறுபாடுகள் பற்றியும் ஆய்வு செய்தார். புவி வெப்பமாதல் பற்றியும் அதை எதிர்கொண்டு அதன் தீய விளைவுகளைத் தவிர்க்கும் வழி வகைகள் பற்றியும் எழுதினார்.
இவர் எழுதிய காஸ்மாஸ் என்னும் அண்டவியல் பற்றிய தொலைக் காட்சித் தொடர் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து காஸ்மாஸ் என்னும் பெயரில் நூல் ஒன்றும் அவரால் எழுதப்பட்டது. காண்டாக்ட் என்னும் பெயரில் ஒரு புதினமும் அவர் எழுதினார்.
தனது படைப்புகளில் அறிவியல் முறை (Scientific method), அறிவியல் அவ நம்பிக்கை (Scientific skepticism) போன்றவற்றை பெரிதும் முன்வைத்துள்ளார். வேற்றுக்கோள் உயிரினங்களின் உயிரியலின் (Exobiology) முன்னோடியாகக் கருதப்பட்ட இவர், வேற்றுக் கோள்களில் அறிவாற்றல் உள்ள உயிர்களைத் தேடும் சேட்டி (SETI - Search for Extra-Terrestrial Intelligence) திட்டத்துக்கு தனது படைப்புகளின் மூலம் ஆதரவு தேடித்தந்தார்.
புத்தகங்கள்:-
டிராகன்ஸ் ஆஃப் ஈடன்(Dragons of Eden),
காஸ்மோஸ்(Cosmos),
புரோகாஸ் பிரெய்ன் (Brocas' Brain),
தி பேல் புளூ டாட் (The Pale Blue Dot),
காண்டாக்ட் (Contact),
தி டீமன் ஹாண்டட் வோர்ல்டு(The Demon Haunted World) போன்றவை குறிப்பிட்ட சில புத்தகமாகும்.
விருதுகள்:-
புலிட்சர் பரிசு-(1978),
மனிதாபிமானி விருது-(1981),
ஜான் எப் கென்னடி விருது- (1982),
ஐசாக் அசிமோவ் விருது- (1994),
ஓர்ஸ்டட் பதக்கம்- (1990)
பொதுநல விருது- (1994) பெற்றார்.
மறைவு:-
டிசம்பர்- 20, 1996 ஆம் ஆண்டு,
சியாட்டில், வாஷிங்டன் அமெரிக்காவில் மரணமடைந்தார்.
டிசம்பர்-20. அறிவியல், வானவியல், வானியற்பியல் போன்ற துறைகளை மக்களிடையே பிரபலமாக்கிய அமெரிக்க அறிவியிலாளர்- கார்ல் எட்வர்ட் சேகன் (Carl Edward Sagan) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:39
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:39
Rating: 5
Tags :
DECEMBER


No comments: