Breaking

டிசம்பர்-20. வான் டி கிராப் மின்னியற்றி இயந்திரத்தை உருவாக்கிய, அமெரிக்க இயற்பியலாளர்- ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப் (Robert Jemison Van de Graaff) பிறந்த தினம்.

இன்று பிறந்த நாள்:- டிசம்பர்-20.


வான் டி கிராப் மின்னியற்றி
இயந்திரத்தை உருவாக்கிய, அமெரிக்க இயற்பியலாளர்-
ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப்
(Robert Jemison Van de Graaff)
 பிறந்த தினம்.

பிறப்பு:-

அமெரிக்காவின் அலபாமா மாநிலம் டஸ்கலூசா நகரில் டிசம்பர்-20, 1901 ஆம் ஆண்டு  பிறந்தார்.
பள்ளியில் படிக்கும்போதே விளையாட்டில் ஆர்வமாக இருப்பார்.
இவர் விடுமுறை நாட்களில் நீராவிப் படகு கட்டும் இடத்தில் வேலை செய்தார்.


அலபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்றும், B.s. பட்டத்தை 1922 ஆம் ஆண்டு பெற்றார்.
பிறகு,1923 ஆம் ஆண்டு,
மெக்கானிகல் இன்ஜினீயரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார். 
பிறகு, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு குயீன்ஸ் கல்லூரியில் 1928 இல் முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்:-

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல்பேராசிரியராகப் பணிபுரிந்தார். 

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பால்மர் இயற்பியல் ஆய்வகத்தில் நேஷனல் ரிசர்ச் ஃபெல்லோவாக பணியாற்றினார். 

 

ஆய்வுகள்:-

கன்வேயர் மூலம் இரும்புத் தாதுவை தரப்படுத்தும் முறையைக் கண்டறிந்தார்.

பாரீஸில் 1924 ஆண்டு
மேரி க்யூரி அவர்களின், அணுக்கருவின் சில குறிப்பிட்ட ஆற்றல் குறித்த செயல்முறை விளக்கத்தால், இவர் கவரப்பட்டு, அணு ஆற்றல் குறித்த ஆய்வுகளில் ஆராய்ச்சி செய்தார். அப்போது
அணு ஆராய்ச்சிகளில் பயன்படுத்தும் உயர் வேக துகள்கள் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டார்.
மின்னியல் ஆக்ஸிலரேஷன் துறையிலும் பல மேம்பாடுகளை செய்தார்.
மேலும் தனது ஆராய்ச்சிகளுக்கு நிதி திரட்டி கெல்வின் வகை உயர் மின்னழுத்த ஜெனரேட்டரை மேம்படுத்தும் முயற்சியை தொடங்கினார். 
இந்த ஜெனரேட்டர் குறித்து நியூயார்க்கில் 1931ஆம் ஆண்டு செயல்முறை விளக்கம் அளித்தார்.
1929 ஆம் ஆண்டில் அதிக திறன் வாய்ந்த  ஜெனரேட்டர் உருவாக்கி அதன்மூலம் 80,000 வோல்ட்ஸ் திறன் அதிகரித்தார்.
பிறகு மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி, ஜெனரேட்டரில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை செய்து  திறனை மேம்படுத்தினார். 
இறுதியாக, 7 மில்லியன் வோல்ட் உற்பத்தி செய்யும் 43 அடி உயர ஜெனரேட்டரை உருவாக்கினார்.
இந்த ஜெனரேட்டருக்கு 1935 ஆம் ஆண்டு உரிமம் பெற்றார்.

பயன்பாடுகள்:-

தற்போது சிறிய வான் டி கிராப் இயந்திரங்கள்  ஆய்வகங்களில் நிலைமின்னியல்பற்றி கற்றுக் கொள்ளவும், 
அறிவியல் அருங்காட்சியகங்களில் காட்சிப் பொருளாகவும் பயன்படுத்த உருவாக்கப்படுகிறது.
இந்த மின்னியற்றி தற்போது இயற்பியல் ஆய்வகங்களில் ஒரு துகள் முடுக்கியாக
பயன்படுகிறது. ஒரு வெற்றிடக் குழாயில் உயர்திறன் மின்னழுத்தத்தை செயல்படுத்தும் போது அணுவியல் துகள்கள் முடுக்கமடைகின்றன. 
1930 ஆம் ஆண்டு சைக்ளோட்டிரான்
கண்டுபிடிக்கப்படும் வரை இதுவே ஒரு மிகச் சிறந்த முடுக்கியாக செயல்பட்டது. இன்றும் கூட அணு மருத்துவத்துறைகளில் ஆற்றல் துகள்களை முடுக்கச் செய்வதற்கும், 
எலக்ட்ரான்களைமுடுக்குவிக்கச் செய்து எக்சு-கதிர்களை உருவாக்கவும் நிலைமின்னியற்றி பயன்படுகிறது. 

பதவிகள்:-

2 ஆம் உலகப் போரில் இவரது ஜெனரேட்டரை பயன்படுத்தி கடற்படை தளவாடங்களை எக்ஸ்-ரே ஆய்வு செய்வதற்கான பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
மசாசூசெட்சில் ஹை வோல்டேஜ் இன்ஜினீயரிங் கார்ப்பரேஷன் (ஹெச்விஇசி) என்ற நிறுவனத்தை 1946 ஆம் ஆண்டு தொடங்கினார். இந்நிறுவனம் வான் டி கிராஃப் ஜெனரேட்டர்கள், ஆக்ஸிலரேட்டர்கள் தொடர்பான பல புதிய சாதனங்களை உற்பத்தி செய்தது.

விருதுகள்:-

எலியட் சிரிஸோன் பதக்கம்-(1936), துடடேல் பதக்கம் மற்றும் பரிசு- (1947),
டாம் டபிள்யூ பொன்னர் பரிசு அணு இயற்பியல்- (1966) ஆம் ஆண்டு பெற்றார்.

மறைவு:-

1960 ஆம் ஆண்டு தனது பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், ஜனவரி-16, 1967 ஆம் ஆண்டு, மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.