Breaking

டிசம்பர்-20 போலரோகிராஃப் சாதனத்தை உருவாக்கியவர்வேதியியலுக்கான நோபல் வென்ற அறிவியல் அறிஞர்-ஜெரோஸ்லாவ் ஹெரோவ்ஸ்கி பிறந்த தினம்.


இன்று பிறந்தநாள் டிசம்பர்-20
போலரோகிராஃப் சாதனத்தை உருவாக்கியவர்வேதியியலுக்கான நோபல் வென்ற அறிவியல் அறிஞர்-ஜெரோஸ்லாவ் ஹெரோவ்ஸ்கி பிறந்த தினம்.

🍄 செக் குடியரசின் தலைநகரம் பிராக்கில் பிறந்தவர் (1890). பள்ளிக் கல்விக்குப் பிறகு, 1913-ல் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். 

🍄 மின்வேதியியலில் மிகவும் ஆர்வம் கொண்டார். முதல் உலகப் போரின்போது ராணுவ மருத்துவமனையில் வேதியியலாளராகவும் கதிரியக்க சிகிச்சை வழங்குபவராகவும் பணியாற்றினார்.

🍄 போருக்குப் பின்னர், உயர் கல்வி பயின்று டி.எஸ்.சி. பட்டம் பெற் றார். லண்டனில், அலுமினியத்தின் எலக்ட்ரோ நாட்டம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். 

🍄 பிராக், சார்லஸ் பல்கலைக்கழகத்தில் பகுப்பாய்வு வேதியியல் கல்வி அமைப்பில் துணை ஆசிரியராகத் தன் தொழில் வாழ்வைத் தொடங்கினார்.

🍄 1926-ல் அந்தப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் சார் வேதியியல் துறையின் முதல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 

🍄 அலுமினியத்தின் ரசாயனப் பண்புகள் குறித்து ஆராய்ந்தார். புதிதாகப் பிறந்த மின் வேதியியல் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டார். 

🍄 அலுமினியத்தின் எலக்ட்ரோட் ஆற்றலைத் நிர்ணயம் செய்தார்.

🍄 வோல்ட்டா அளவியலிலும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கினார். 

🍄 பாதரசத்தின் மின் நுண்புழைமை (capillarity) குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். 

🍄 மின் வேதியியல் பகுப்பாய்வு முறையை கரிம மற்றும் கனிம சேர்மங்கள் குறித்த ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினார். 

🍄 1925-ல் முதன் முதலாக போலரோகிராப் என்ற சாதனத்தை உருவாக்கினார்.

🍄 கரிம மற்றும் கனிம சேர்மங்களின் வேதியியல் அமைப்புகள் குறித்த ஆய்வுகளில் இவரது சாதனம், ஒரு வரமாகவே கருதப்பட்டது. பல்வேறு வேதியியல் ஆய்வுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விஞ்ஞானிகளுக்கு இது பேருதவியாக அமைந்தது. 

🍄 மேலும், அலைவு (oscillation) போலரோகிராபி குறித்தும் ஆராய்ந்தார். 

🍄 *1938-ல் முனைப்படு வரைவியல் முறையைக் (polarographic method) கண்டறிந்தார்.

🍄 போலரோகிராபியின் பகுப்பாய்வு சாதனத்தையும் கண்டறிந்தார். 

🍄 அறிவியல் பகுப்பாய்வின் முனைப்படு வரைவியலைக் கண்டறிந்து மேம்படுத்தியதற்காக இவருக்கு 1959-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

🍄 மின்பகுப்பாய்வு முறையின் (electroanalytical method) தந்தை எனப் போற்றப்பட்டார். 

🍄 மின்னோட்டம் அல்லது வோல்ட்கள் அல்லது இரண்டையும் அளந்து கண்டறியும் முறை இது. 

🍄 ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளில் எழுதிய அறிவியல் கட்டுரைகள், இதழ்கள் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றன.

🍄 எனவே இவர் செக் அறிவியல் இதழ்கள் உருவாகவும் செக் மொழியில் அறிவியல் வார்த்தைகளைக் கண்டறிவதிலும் நிறைய நேரம் செலவிட்டார். 
 
🍄 செக் குடியரசின் போலரோகிராபிக் இன்ஸ்டிடியூட்டின், அறிவியல் அகாடமி இயக்குநராக 1950-ல் நியமிக்கப்பட்டார்.

🍄 வார்ஷா பல்கலைக்கழகம், பாரீஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. பெங்களூரு, இந்திய அறிவியல் கழகம் மற்றும் அமெரிக்க, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட பல நாடுகளின் அறிவியல் அமைப்புகளின் கவுரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🍄 மின் வேதியியல் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் துறையில் உலக அளவில் குறிப்பாக, செக் குடியரசின் அறிவியல் களத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜெரோஸ்லாவ் ஹெரோவ்ஸ்கி 77-வது வயதில் (1967) மறைந்தார்.
🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄
🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄

No comments:

Powered by Blogger.