Breaking

டிசம்பர்-23 அமெரிக்க கரிம வேதியியலாளர், அமெரிக்க வேதியியல் கழகத்தின் முதல் பெண் தலைவர்-அன்னா ஜேன் ஆரிசன் (Anna Jane Harrison) பிறந்த தினம்.

இன்று பிறந்த நாள்:-  டிசம்பர்-23


அமெரிக்க கரிம வேதியியலாளர்,
அமெரிக்க வேதியியல் கழகத்தின் முதல் பெண் தலைவர்-அன்னா ஜேன் ஆரிசன் (Anna Jane Harrison) பிறந்த தினம்.

பிறப்பு:-

டிசம்பர்- 23, 1912 இல்
பென்டன் நகரம், மிசூரியில்
பிறந்தார். மிசிசோரியில் உள்ள மெக்சிகோ நகர உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போதே அறிவியலில் ஆர்வம் பெற்றுத் திகழ்ந்தார். இவர் இளம் வேதியியல் பட்டத்தை 1933 ஆம் ஆண்டிலும், இளம் கல்வியியல் பட்டத்தை 1935 யிலும், முதுகலை வேதியியல் பட்ட்த்தை 1937 ஆம் ஆண்டிலும் முனைவர் பட்டத்தை  1940 யிலும் கொலம்பியாவில் இருந்த மிசூரி பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார்.


பணிகள்:-

 வேதியியலில் முதுகலை பட்டம் பயிலும்போதே மிசிசோரியில் உள்ள தான் படித்த ஊரகப் பள்ளியில் வேதியியல் பாடம் கற்பித்தார்.

சோபி நியூகோம்பு நினைவுக் கல்லூரியில் வேதியியலைப் பயிற்றுவித்தார்.

இவர் 1945 இல் மவுண்ட் ஓல்யோக் கல்லூரியில் வேதியியல் துறையில் துணைப்பேராசிரியராக சேர்ந்தார்.
பிறகு 1950 இல் அங்குப் பேராசிரியரானார். மேலும் 1960 முதல் 1966 வரை அங்கு துறையின் தலைமையையும் ஏற்றார். 

இவர் 1972 முதல் 1978 வரை அமெரிக்க அறிவியல் குழுமத்தில் பணிபுரிந்தார்.

ஆராய்ச்சிகள்:-

ஆரிசன் 1942 இல் தன் கல்விப்பணியில் இருந்து விடுமுறை பெற்று மிசிசோரி பல்கலைக்கழகத்தில் 2 ஆம் உலகப் போர் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.

இவர் 1944 இல் நச்சுப்புகை குறித்து தேசிய பாதுகாப்பு ஆய்வுக் குழுமத்துக்காக ஆய்வை மிசிசோரி, கான்சாசு நகரில் இருந்த ஏ.ஜே.கிரினெர் நிருவனத்திலும் நியூயார்க்கில் உள்ள கார்னிங்குகண்ணாடி பணிகள் நிறுவனத்திலும் மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆய்வு அமெரிக்கப் படைத்துறைக்குக் களத்தில் நச்சுப்புகையைக் கண்டறியும் கருவியை உருவாக்க உதவியது.

இவரது அய்வு கரிமச் சேர்மங்களின் கட்டமைப்பிலும் அவற்றின் ஒளியுடனான ஊடாட்டத்திலும், குறிப்பாக புற ஊதாக்கதிர், மீப்புற ஊதாக்கதிருடன் நிகழும் ஊடாட்டத்தில் அமைந்தது .

தேர்ந்தெடுத்த கரிமச் சேர்மங்களால் ஆகிய பொருள்களின் புற ஊதா உட்கவர்வு கதிர்நிரல்கள், ஒளிமுனையத்தின் உட்கூறுகள் ஆகியவற்றின் செய்முறை ஆராய்ச்சிகள் செய்தார்.

பதவிகள்:-

இவர் 1978 இல் அமெரிக்க வேதிய்ல் கழகத்தின் முதல் பெண்தலைவரானார்.

இவர் 1983 இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக்கழகத்தின் தலைவரானார்.

விருதுகள்:-

இவர் தன் ஆய்வுக்காக அமெரிக்க வெங்களிம கழகத்தின் பிரேன்க் பாரெசுட்டு விருதைப் பெற்றார்.

நூல்கள்:-

இவர் அமெரிக்கவேதியியல் கழக இதழ், வேதியியல், பொறியியல் செய்திகள் ஆகிய இதழ்களுக்கும் பிரித்தானிக்கா
கலைக்களஞ்சியத்துக்கும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

1989 இல் தன் ஓல்யோக் கல்லூரி ஆசியர் எட்வின் எஸ்.வீவருடன் இணைந்து "வேதியியல்:ஒரு புரிதலுக்கான தேட்டம்" எனும் பாடநூலை எழுதியுள்ளார்.

மறைவு:-

ஆகஸ்ட்-08, 1998 ஆம் ஆண்டு  தனது 85 ஆம் அகவையில் மசாசூசட் ஓல்யோக்கில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.