Breaking

டிசம்பர்- 25. ஜெர்மன் மருந்தியலாளர், உளவியலாளர், அசிடைல்கோலின் வகையை ஒரு உள்ளார்ந்த நரம்பியக் கடத்தி கண்டறிந்தவர்- ஓட்டோ லேவி (Otto Loewi) மறைந்த தினம்.


இன்று நினைவு நாள் டிசம்பர்- 25.

ஜெர்மன்  மருந்தியலாளர்,  உளவியலாளர்,  அசிடைல்கோலின் வகையை ஒரு உள்ளார்ந்த நரம்பியக் கடத்தி கண்டறிந்தவர்-
ஓட்டோ லேவி (Otto Loewi) மறைந்த தினம்.

பிறப்பு:-

ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரில் ஜூன்-3, 1873 ஆம் ஆண்டில் பிறந்தார். 

இவர், பள்ளிக் கல்வியை முடித்த  பிறகு, மூனிச் மற்றும் ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகங் களில் மருத்துவம் பயின்றார். 

பணிகள்:-

கனிம பகுப்பாய்வு வேதியியல் பயின்று, ஸ்ட்ராஸ்பர்கில் உயிரி வேதியியல் நிறுவனத்தில் பணியாற்றினார். 

பிராங்க்பர்ட்டில் ஒரு மருத்துவமனையில் ஓராண்டு காலம் மருத்துவராகப் பணிபுரிந்தார். 

நாளடைவில், மருந்தியலில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள முடிவெடுத்து,  ஹான்ஸ் மெயரின் ஆய்வுக்கூடத்தில் உதவியாளராகப் பணியாற்றினார். 
வளர்சிதை மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

வியன்னாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பேராசிரியராக 1904-ல் நியமிக்கப்பட்டார்.

ஆய்வுகள்:-

விலங்குகள் உடலின் புரதத் தொகுப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். 

சிறுநீரக செயல்பாட்டின் உடலியல், மருந்தியல் சோதனைகள் குறித்து தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளியிட்டார்.

கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றங்களோடு தொடர்புடைய பிரச்சினைகளை ஆராய்ந்து தனது கண்டுபிடிப்புகள் குறித்த கட்டுரைகளை வெளியிட்டார். 

நரம்புத் தூண்டுதல்களின் ரசாயனத் தாக்கங்கள், நரம்புநொதிகள் குறித்து கண்டறிந்தார். இதன் தொடர்ச்சியாக மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களின் மத்திய நரம்பு மண்டலத்திலும் அதன் புற எல்லையிலும் காணப்படும் நியூரோ டிரான்ஸ்மிட்டர், அசிட்டைல்கோலைனை கண்டறிந்தார்.

சோதனை:-

தவளைகளில் இரண்டு   இதயங்களை வெட்டிக்கொண்டார்.
 இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துகின்ற  நரம்புடன் ஒன்று, அதனுடன் மற்றொரு இதயம். இரண்டு இதயங்களும் ஒரு உப்புக் கரைசலில் வைத்தார்.
(அதாவது ரிங்கரின் தீர்வு). மின்னழுத்த நரம்புகளை மின்மயமாக்குவதன் மூலம், லோவி முதல் இதயத் துடிப்பு மெதுவாகச் செய்தார். பின்னர், லோவி, முதல் இதயத்தில் சில எடுத்து, இரண்டாவது இதயத்தில் பயன்படுத்தினார். 

திரவத்தின் பயன்பாடு இரண்டாவது இதயமும் மெதுவாக அடித்து, வாஸ்களின் நரம்பு மூலம் வெளியான சில கரையத்தக்க இரசாயனத்தை இதய துடிப்பு கட்டுப்படுத்துகிறது என்று நிரூபித்தார்.
இது   வேகஸ்ஸ்டாஃப் என்று அழைத்தார். 


பதவிகள்:-

1905-ல் மெயர்ஸ் ஆய்வுக்கூடத்தில் அசோசியேட் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். 

ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் துறை தலைமைப் பொறுப்பில் 1909-ல் நியமிக்கப்பட்டார்.
 

நோபல் பரிசு:-

இதய பாதிப்புகள் குறித்த ஆய்வுகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதற்காக இவரது நண்பர் சர் ஹென்றி டேலுடன் இணைந்து இவருக்கு 1936-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ForMemRS-1954

மறைவு:-

நரம்பியல் அறிவியலின் தந்தை என சிறப்பிக்கப்பட்ட இவர், 
டிசம்பர் -25, 1961இல், தனது 88 வது வயதில்,
நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்காவில்
மறைந்தார்.

No comments:

Powered by Blogger.