Home
DECEMBER
டிசம்பர் -25 ஜெர்மானிய இயற்பியலாளர், எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் கண்டுபிடித்தவர்- ஏர்ணஸ்ட் ஆகஸ்ட் பிரீட்ரிச் ருஸ்கா (Ernst August Friedrich Ruska) பிறந்த தினம்.
டிசம்பர் -25 ஜெர்மானிய இயற்பியலாளர், எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் கண்டுபிடித்தவர்- ஏர்ணஸ்ட் ஆகஸ்ட் பிரீட்ரிச் ருஸ்கா (Ernst August Friedrich Ruska) பிறந்த தினம்.
16:21
Read
இன்று பிறந்தநாள்:- டிசம்பர் -25
ஜெர்மானிய இயற்பியலாளர், எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் கண்டுபிடித்தவர்-
ஏர்ணஸ்ட் ஆகஸ்ட் பிரீட்ரிச் ருஸ்கா (Ernst August Friedrich Ruska) பிறந்த தினம்.
பிறப்பு:-
டிசம்பர் 25, 1906
ஆம் ஆண்டு ஹெய்டில்பர்க்கில் பிறந்தார்.
1925 தொடக்கம் 1927 வரை மியூனிக் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும், பின்னர் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும் கல்வி கற்றார்.
கண்டுபிடிப்புகள்:-
ஒளியைப் பயன்படுத்தும் நுண்நோக்கியைக் காட்டிலும் ஒளியிலும் அலை
நீளம் குறைந்த இலத்திரன்களைப் பயன்படுத்துவதன்மூலம் கூடிய உருப்பெருக்கத்தைப் பெறமுடியும் என உணர்ந்தார்.
1931 இல் இலத்திரன் வில்லை ஒன்றை உருவாக்கிய இவர், தொடர்ந்து
இவ்வாறான பல வில்லைகளை உருவாக்கினார்.
1933 இல், இலத்திரன் நுண்நோக்கியை
உருவாக்கினார்.
பணிகள்:-
1937க்கும், 1955க்கும் இடையில் Siemens-Reiniger-Werke AG என்னும் நிறுவனத்தில் ஆய்வுப் பொறியியலாளராகப் பணியாற்றினார்.
1955 தொடக்கம், 1972 வரை பிரிட்ஸ் ஹார்பெர் நிறுவனத்தின் (Fritz Harber Institute) இலத்திரன் நுண்நோக்கியல் நிறுவனத்தில் (Institute for Electron Microscopy) இயக்குனராகப் பணி புரிந்தார்.
அதே சமயத்தில் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும் ஓய்வு பெறும் வரை பேராசிரியராகக்கடமையாற்றினார்.
விருதுகள்:-
அடிப்படை மருத்துவ ஆராய்ச்சிக்கான ஆல்பர்ட் லஸ்கர் விருது (1960)
டட்டெல் பதக்கம் மற்றும் பரிசு (1975)
ராபர்ட் கோச் பரிசு (தங்கம்,- 1986)
1986 இல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.
மறைவு:-
1988 ஆம் ஆண்டு மே-27 ஆம் தேதி, தனது 81 வது வயதில் இவர் மேற்கு ஜெர்மனியில் காலமானார்.
டிசம்பர் -25 ஜெர்மானிய இயற்பியலாளர், எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் கண்டுபிடித்தவர்- ஏர்ணஸ்ட் ஆகஸ்ட் பிரீட்ரிச் ருஸ்கா (Ernst August Friedrich Ruska) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
16:21
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
16:21
Rating: 5
Tags :
DECEMBER

No comments: