மலேரியா! எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!
பருவநிலை மாற்றம் ஒருபுறம் மக்களை அச்சுறுத்தி வரும் சூழலில், கொசுக்களால் உலக மக்கள் ஜனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம் என எச்சரித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
கொசுக்களால் பரவும் நோய்களில் ஒன்றான மலேரியாவால் கிட்டத்தட்ட ஆண்டுக்கு 4 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். இரண்டு நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை மலேரியாவை தடுக்க கைகோக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு அறிக்கை
2010ஆம் ஆண்டு 23.9 கோடி மக்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். இது 2015ஆம் ஆண்டு 21.4 கோடியாக குறைந்தது. இதன் காரணமாக 6 லட்சமாக இருந்த உயிரிழப்பு, 5 லட்சமாகக் குறைந்தது.
ஆனால், தற்போது மலேரியா பாதிப்புகளின் எண்ணிக்கை மீண்டும் உயர்வை நோக்கி செல்கிறது. 2016 ஆம் ஆண்டு 21.7 கோடி மக்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 2018ஆம் ஆண்டு 22.8 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2017ஆம் ஆண்டு 4 லட்சத்து 16 ஆயிரம் மக்கள் மலேரியா நோய் தாக்கி உயிரிழந்த நிலையில், 2018ஆம் ஆண்டு 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.


No comments: