இன்றைய நாளில் அறிவியல் துளிகள்..
ஜனவரி-01. இன்றைய நாளில் அறிவியல் துளிகள்..
கிமு 45 இல் உரோமைப் பேரரசில் யூலியன் நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. சனவரி 1 புத்தாண்டின் புதிய நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1772-90 ஆம் உலகின் முதலாவது பயணிகள் காசோலை லண்டனில் விற்பனைக்கு கொண்டு வந்த தினம்.
1788 ஆம் ஆண்டு தி டைம்ஸ் முதல் இதழ் இலண்டனில் வெளியிடப்பட்டது.
1801 ஆம் ஆண்டு சிறுகோள் பட்டையில் காணப்படக்கூடிய மிகப்பெரும் பொருள் சியரீசு கியூசெப்பே பியாசி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1858 ஆம் ஆண்டு இலங்கையில்
முதலாவது தந்திச்
சேவை கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
1872 ஆம் ஆண்டு இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
1989 ஆம் ஆண்டு ஓசோன் குறைபாட்டை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களைத் தடை செய்யும் மொன்ட்ரியால் உடன்பாடு நடைமுறைக்கு வந்த தினமாகும்.


No comments: