Home
JANUARY
ஜனவரி-02. எர்பிக்-ஆரோ பொருட்கள், எர்பிக் ஏஇ/பிஇ விண்மீன்கள் கண்டுபிடித்த அமெரிக்க வானியலாளர்- ஜார்ஜ் அவார்டு எர்பிக் (George Howard Herbig) பிறந்த தினம்.
ஜனவரி-02. எர்பிக்-ஆரோ பொருட்கள், எர்பிக் ஏஇ/பிஇ விண்மீன்கள் கண்டுபிடித்த அமெரிக்க வானியலாளர்- ஜார்ஜ் அவார்டு எர்பிக் (George Howard Herbig) பிறந்த தினம்.
00:09
Read
இன்று பிறந்த நாள்:- ஜனவரி-02.
எர்பிக்-ஆரோ பொருட்கள்,
எர்பிக் ஏஇ/பிஇ விண்மீன்கள்
கண்டுபிடித்த அமெரிக்க
வானியலாளர்-ஜார்ஜ் அவார்டு எர்பிக் (George Howard Herbig) பிறந்த தினம்.
பிறப்பு:-
ஜனவரி-02, 1920 ஆம் ஆண்டு
வீலிங்கு, மேற்கு வர்ஜீனியா,
அமெரிக்காவில் பிறந்தார்.
ஆரம்ப கல்வி பயின்று முடித்தார். பிறகு முனைவர் பட்டத்தை 1948 இல் பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பெற்றார். அதன் ஆய்வேடு, ”ஒண்முகில்நிலையில் மாறுபடும் விண்மீன்கள்” என்பதாகும். அவரது சிறப்புப் புலம் படிமலர்ச்சியின் தொடக்க
நிலை விண்மீன்கள் ஆகும்.
இவை எர்பிக் Ae/Be வகை விண்மீன்கள் என வழங்கப்படுகின்றன.
பணிகள்:-
அவாய் பல்கலைக்கழகத்தில் வானியலாளராகப் பணியாற்றினார்.
கண்டுபிடிப்புகள்:-
உடுக்கணவெளி ஊடகத்தைக்கண்டுபிடித்தார்.
இவர் கியூல்லெரிமோ ஆரோவுடன் இணைந்து
எர்பிக் ஃஆரோ பொருட்களைக்
கண்டுபிடித்தார். இவை ஒண்முகில் நிலையில் தோன்றும் விண்மீனின் இருமுனைமைப் பாய்வால் ஏற்படும் பொலிவார்ந்த படலத்திட்டுகள்/பட்டைகளாகும். உடுக்கண வெளி விரவல் பட்டை
Diffuse Interstellar Band-(DIB)
அறிவுப்புல ஆய்விலும் பெரும்பங்களிப்பு செய்துள்ளர்.
கட்டுரைகள்:-
1963 முதல் 1995 வரை தொடர்ச்சியாக ஒன்பது கட்டுரைகளை “விரவிய உடுக்கணப் பட்டைகள்”
("The diffuse interstellar bands.")
என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.
விருதுகள்:-
அமெரிக்க வானியற் கழகத்தின் வானியலுக்கான எலன் பி. வார்னர் பரிசு-(1955),
அமெரிக்க வானியற் கழகத்தின் என்றி நோரிசு இரசலின் விரிவுரைத் தகைமை பரிசு-(1975),
லீக் பல்கலைக்கழக விருது-(1969),
பசிபிக் வானியற் கழக புரூசு விருது-(1980),
பெற்றார்.
இறப்பு:-
அக்டோபர்-12, 2013 ஆம் ஆண்டு, ஹொனலுலு,
ஹவாயில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
குறுங்கோள் 11754 எர்பிக்,
எர்பிக் Ae/Be வகை விண்மீன்கள்,
எர்பிக்-ஆரோ பொருட்கள் என்று இவரது பெயரில் வழங்கப்படுகிறது.
ஜனவரி-02. எர்பிக்-ஆரோ பொருட்கள், எர்பிக் ஏஇ/பிஇ விண்மீன்கள் கண்டுபிடித்த அமெரிக்க வானியலாளர்- ஜார்ஜ் அவார்டு எர்பிக் (George Howard Herbig) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
00:09
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
00:09
Rating: 5
Tags :
JANUARY


No comments: