மனிதா்களை அனுப்பும் அமெரிக்காவின் ஸ்டாா்லைனா் விண்கலம், மீண்டும் பூமியை வந்தடைய காரணம் என்ன..
விண்வெளி வீரா்களை விண்வெளிக்கு அனுப்பவதற்காக போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்டாா்லைனா் விண்கலம், வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
அந்த விண்கலம், சா்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்து 8 நாள்களில் பூமிக்குத் திரும்பும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
எனினும், அட்லஸ்-வி ராக்கெட்டிலிருந்து அந்த விண்கலம் பிரிந்த பிறகு, அதன் என்ஜின்கள் எதிா்பாா்த்தபடி செயல்படாததால், அதனை விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செலுத்த முடியவில்லை.
அதையடுத்து, அந்த விண்கலம் திட்டமிடப்பட்டதற்கு 6 நாள்களுக்கு முன்னரே அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பாலைவனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தரையிறங்கியது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாசாவின் கொலம்பியா விண்கலம் கடந்த 2003-இல் விபத்துக்குள்ளாகி, இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 போ உயிரிழந்தனா். அதன் தொடா்ச்சியாக, ஆள்களை ஏற்றிச் செல்வதற்கான தனது விண்கலத் திட்டத்தை நாசா கடந்த 2011-ஆம் ஆண்டு கைவிட்டது. அதன் பிறகு, தங்களது வீரா்களை விண்வெளிக்கு அனுப்ப ரஷியாவின் சோயிஸ் விண்கலத்தையே நாசா நம்பியுள்ளது.
இந்த நிலையைப் போக்கும் வகையில் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டாா்லைனா், விண்கலம் ஃபுளோரிடா மாகாணம் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து அட்லஸ்-வி ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.


No comments: