பச்சிளம் குழந்தைகளுக்குப் பாதரசம் மற்றும் வெற்றிலைச்சாறு கொடுத்தால், குழந்தையின் நிறம் சிவப்பாகும்' என்ற வதந்திகள் தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் உலாவுகின்றன.என்பது பற்றி அறிவோம்
குழந்தையின் நிறம் சிவப்பாகுமா?!'
பச்சிளம் குழந்தைகளுக்குப் பாதரசம் மற்றும் வெற்றிலைச்சாறு கொடுத்தால், குழந்தையின் நிறம் சிவப்பாகும்' என்ற வதந்திகள் தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் உலாவுகின்றன.
இதை நம்பி, பலரும் குழந்தைகளுக்குப் பாதரசம் கொடுக்கிறார்கள். இதனால் குழந்தையின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். இதுகுறித்து நரம்பியல் மற்றும் மூளை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் மரியானோ ஆண்டோ புரூனோவிடம் பேசினோம்.
"இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை பிரச்னை அதிகளவில் உண்டாகிறது. எனவே, அவர்கள் இரும்புச் சத்து (iron tablet) மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். அது தாய்க்கு மட்டுமன்றி, பிறக்கவிருக்கும் குழந்தையின் உடல்நலத்துக்கும் முக்கிய பங்குவகிக்கும். ஆனால், கர்ப்பிணிகள் இரும்புச் சத்து மாத்திரையை எடுத்துக்கொண்டால் குழந்தை கறுப்பு நிறத்தில் பிறக்கும் என்று ஒரு வதந்தி உலாவுகிறது. இதை நம்பி இரும்புச் சத்து மாத்திரியை எடுத்துக்கொள்ளாமல், கர்ப்பிணிகள் இறந்துபோவதும் அதிகம் நடக்கிறது.
அடுத்து, பாதரசம் மற்றும் வெற்றிலைச்சாறு வதந்தி. பாதரசம் மற்றும் வெற்றிலைச்சாறு இரண்டையும் கலந்து, பச்சிளம் குழந்தைக்குக் கொடுத்தால் குழந்தையின் நிறம் கூடும் (சிவப்பாகும்) என்ற அடிமுட்டாள்தனமான வதந்தியும் அதிகம் உலாவுகிறது. இதை நம்பி, பிறந்த ஓரிரு தினங்களில் பச்சிளம் குழந்தைக்கு, பாதரசம் மற்றும் வெற்றிலைச்சாறு கொடுக்கிறார்கள்.
இதனால் குழந்தையின் குடல் ஓட்டையாகி பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. சமயங்களில், குழந்தைக்கு உயிரிழப்புகூட நிகழ்கிறது. இப்படி, வதந்திகளைக் கடைப்பிடித்து நமக்குத் தெரியவருவது மற்றும் தெரியவராத வகையில் உயிரிழக்கும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றன.
ரத்த சோகை உள்ள கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைபடி நிச்சயம் இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், குழந்தைக்கு நிற மாற்றம் ஏற்படும் என்பதெல்லாம் வடிகட்டிய வதந்தியே. எனவே, இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம்.
டாக்டர் புரூனோசமூக வலைதளங்களில் வரும் வதந்திகள் மற்றும் அதுபோன்ற கருத்துகளைப் பரப்புபவர்களையும் நம்பி, வீட்டிலேயே பிரசவம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது.
முன்பெல்லாம் குழந்தை சிவப்பாகப் பிறக்க, குங்குமப்பூ கலந்த பாலை கர்ப்பிணிகளுக்குக் கொடுப்பார்கள். ஆனால், மருத்துவ ரீதியாக அது உண்மையில்லை என்பதைப் பலரும் உணர்ந்துள்ளனர். பெற்றோரின் மரபணுக்களைப் பொறுத்துத்தான் பிறக்கும் குழந்தையின் நிறம் இருக்கும். மற்றபடி தேவையில்லாத எந்த வதந்திகளையும் நம்பக்கூடாது.
வீட்டில் பிரசவம் பார்ப்பதுதான் நல்லது
கர்ப்பிணிகள் உடல்நலப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது
பல் துலக்கக் கூடாது
தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கக்கூடாது
குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடக்கூடாது
ரத்த தானம் செய்யக்கூடாது
உடலுறுப்பு தானம் செய்யக்கூடாது
ஸ்கேன் செய்யக்கூடாது
- இதெல்லாம் சமூக வலைதளங்களில் அதிகம் உலாவும் வதந்திகள். நம் கவனத்துக்கு வராத வதந்திகள் இன்னும் அதிகமாக உலாவுகின்றன. இதையெல்லாம் யார், என்ன காரணத்துக்காக பரப்புகிறார்கள் எனத் தெரியவில்லை.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வந்தப் பிறகுதான் உறுதிசெய்யப்படாத வதந்திகள் அதிகம் பரவிக்கொண்டிருக்கின்றன. இதில் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட தகவல்கள் பரவுவதில் மகிழ்ச்சிதான். ஆனால், அதைவிடவும் வதந்தியான தகவல்கள்தான் காட்டுத்தீபோல வேகமாகப் பரவுகின்றன.
டாக்டர் புரூனோபெற்றோரின் மரபணுக்களைப் பொறுத்துத்தான் பிறக்கும் குழந்தையின் நிறம் இருக்கும். மற்றபடி தேவையில்லாத எந்த வதந்திகளையும் நம்பக்கூடாது.
முன்பெல்லாம் விஞ்ஞானம் வளர வளர மூடநம்பிக்கைகள் குறைந்துகொண்டே வந்தன. இன்று விஞ்ஞானம் ஒருபக்கம் வேகமாக வளந்தாலும், மூடநம்பிக்கைகளும் வளர்ந்துகொண்டே வருவது கவலையை உண்டாக்குகிறது. இதில் பெரிய கொடுமை என்னவென்றால், படித்தவர்களும், நகரப்பகுதிகளைச் சேர்ந்தவர்களும்தான் இதுபோன்ற வதந்திகளை அதிகம் நம்புகின்றனர்; கடைப்பிடிக்கின்றனர்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்புவரை, வசதியில்லாத காரணத்தால், உடனடியாக மருத்துவமனைக்கு வரமுடியாத காரணத்தால்தான், சிலர் வீட்டிலிருந்தே பிரசவம் பார்த்துக்கொள்வார்கள். அப்படியானவர்கள்கூட இன்று பிரசவத்துக்காக சிரமப்பட்டாவது அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
ஆனால், சமூக வலைதளங்களில் வரும் வதந்திகள் மற்றும் அதுபோன்ற கருத்துகளைப் பரப்புபவர்களையும் நம்பி, வீட்டிலேயே பிரசவம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது.
pregnant lady
தவிர, மேற்கூறிய வதந்திகளை நம்பி, அதைக் கடைப்பிடித்து சிக்கல் பெரிதாகி, மருத்துவமனைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. என்னிடம்கூட அப்படி பலர் வருகிறார்கள். சமூக வலைதளங்களில் பரவும் மருத்துவம் சார்ந்த செய்திகளை உடனடியாக நம்பாமல், அதன் உறுதித்தன்மையை சரிபார்த்துக்கொள்வது அவசியம்" என்கிறார் மரியானோ ஆண்டோ புரூனோ.

No comments: