நீங்க வைத்திருக்கும் பர்ஸில் பணம் இல்லையா கவலை வேண்டாம்... இந்த வழிமுறையைப் பின்பற்றினால் எப்பொழுதும் அதிர்ஷ்டமே
தற்காலத்தில் பெரும்பாலானோர் தங்கள் உழைப்பை விட அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து வாழ்கின்றனர்.
கடுமையான முயற்சி கண்டிப்பாக அதிர்ஷ்டத்தை தேடி தரும். இருந்தாலும், சில நேரம் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் ஆன்மிக ரீதியாக அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.
அப்படி நமது அபர்ஸின் மூலம் பணம் கொழிக்கும். அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் சில ஆன்மீக யோசனைகளை பார்க்கலாம்.
நாம் வாங்கும் பர்ஸ் கருப்பு நிறத்தில் இருக்கவே கூடாது.
கிராம்பு, சோம்பு, பட்டை, ஏலக்காய், பச்சை கற்பூரம் ஆகியவை கலந்த ஒரு சிறிய மூட்டையை பர்ஸில் வைக்க வேண்டும்.
இந்த வாசம் லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும். பர்ஸில் அரச இலையை வைப்பதன் மூலம் உங்கள் குறிக்கோள் நிறைவேறும். நீங்கள் மிகவும் அமைதியாகவும் இருக்க முடியும்.
ஆயுதங்களை பர்ஸில் வைக்க கூடாது. பச்சை நிறத்தில் உள்ள நோட்புக் வைத்துக்கொள்ளலாம். பச்சை நிறத்திற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது.
லட்சுமி கடாட்சம் இருக்கும் பர்ஸை பின்பக்கத்தில் வைக்கவே கூடாது. அது நமது உடலுக்கும் நல்லது இல்லை.
நம் அதிர்சட்டத்திற்கும் நல்லதில்லை.


No comments: