Breaking

பிரமிடுகள் பற்றி அதிகம் அறியப்படாத சில உண்மைகள்..

பிரமிடுகள் பற்றி அதிகம் அறியப்படாத சில உண்மைகள்..

நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசயங்களில் மிக முக்கியமான ஒன்று பிரமிடு. உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தைக் கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

பிரமிடுகளில் மிகப் பெரிய பிரமிட் ஆனது கிசா பிரமிடு. 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள் ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.

தற்கால எகிப்து தலைநகர் கெய்ரோவின் புறப்பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலகப் புகழ்பெற்றவை. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் பிரமிடுகள் மிக விந்தையான மற்றும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத விடயங்களை உள்ளடக்கியது.

ஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறைக் கற்களால் எழுப்பப்பட்டது. இவ்வளவு எடை கொண்ட கற்களை ஐநூறு அடி உயரத்திற்கு கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர்.

சுண்ணாம்புக் கற்களின் மேல் அடுக்குகள் நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட சுண்ணாம்புக் கற்களால் வெளிப்புறமாகப் பதிக்கப்பட்டுள்ளன. 23 லட்சம் சுண்ணாம்புக் கற்கள் எவ்வாறு அவ்வளவு உயரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன என்பதும், இத்தகைய பாலைவனப் பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று.

புற கற்களில் வித்தியாசமான எழுத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றை மட்டும் பதித்தாள் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து. இதில் உள்ள மூன்று பிரமிடுகளும் பித்தாகரஸ் (pythagoras) என்கிற கணித விதிகளின் படியும், பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரிணை நட்சத்திரங்களைக் கூறுகின்ற துல்லிய கோட்பாட்டிலும் அமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உள்ளே வைக்கப்பட்டுள்ள உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் விந்தைதான் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. உள்ளே வைக்கப்பட்டிருந்த உடல்கள் கெடாமல், மாறாக முற்றிலும் உலர்ந்த நிலைக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் முற்றிலுமாக பயன்பாடுகள் கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள் பற்றியும், குறுக்கும் நெடுக்குமாக செல்கின்ற சதுர துளைகளின் பயன்பாடுகள் பற்றியும் கண்டறிய இயலாதது, அதனை மர்மம் எனும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.

2004-ம் ஆண்டு இத்தகைய சதுர துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ள ரோபோக்களை உட்செலுத்தி உலகம் முழுவதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக கண்டபோது, உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு உலகம் வியந்தது. இது இன்னும் ஆராய்ச்சியாளர்களிடையே இதனை ஆராய வேண்டும் என்னும் எண்ணத்தை வலுப்படுத்தியது. ஏராளமான மக்கள் இந்த மர்மத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்.
எகிப்து பிரமிடின் யாரும் அறியாத சில உண்மைகள்.
எகிப்தில் கட்டப்பட்டுள்ள பிரமிக்கத்தக்க கோபுரங்களும் பிரமிட் கும்பங்களும் ஒரு புதிரான வரை கணித (hermetic geometry) முறையில் திட்டமிட்டு கட்டப்பட்டதாகத் தெரிகிறது. அந்தக் கணித நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர்கள் சிலரே. அவற்றில் நழுவிச் சென்ற சில கணித துணுக்குகளைத் தான் புராதான அலெக்சாண்டர், கிரேக்க ஞானிகள் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறியப்படுகிறது.

கிசாவின் பெரிய பிரமிடை, உலகின் மிகப் பெரிய மற்றும் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பமான கிசாவின் பெரிய ஸ்பிங்ஸ் (Sphinx) காத்து வருகின்றன.

பிரபலமான நம்பிக்கைக்கு முற்றிலும் மாறாக, பிரமிடுகள் அடிமைகள் அல்லது கைதிகளால் கட்டப்படவில்லை. ஆனால் வழக்கமான ஊதியம் பெறும் தொழிலாளர்களால் கட்டப்பட்டது.

130க்கும் மேற்பட்ட பிரமிடுகள் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
3800 ஆண்டுகளுக்கும் மேலாக, கிசாவின் பெரிய பிரமிட் உலகில் மனிதரால் கட்டமைக்கப்பட்ட உயரமான அமைப்பாகும்.

அனைத்து எகிப்திய பிரமிடுகளும் நைல் நதியின் மேற்கு கரையில் கட்டப்பட்டுள்ளது.

எகிப்திய பிரமிடுகளின் உள்ளே, வெப்பநிலை ஒப்பீட்டளவில் நிலையானதாக சுமார் 20 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
பிரமிடுகளின் நான்கு முகங்கள் சற்று குழியானதாக இருக்கும்.


எவ்வாறு மம்மிகள் உருவாக்கப்படுகின்றன?

இதோ உங்களுக்காக எவ்வாறு மம்மிகள் உருவாக்கப்படுகின்றன என்ற ஒரு சிறிய செய்முறையை, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்காக மட்டும் கூறுகிறேன்.

இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று மரணக் கட்டிலில் அவரைக் கிடத்தி பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் இறந்தவரை குளிப்பாட்டுவார்கள்.

உடலில் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பர்.

நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டு கல் உப்பில் பதப்படுத்தப்படும்.

இருதயம் அறிவின் இருப்பிடமாகக் கருதப்பட்டதால், அது உடலுக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கும்.

ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு, உடைத்து மூளையை எடுத்துவிடுவார்கள்.

உடல் கல் உப்பால் மூடப்படும்

நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி அதன்மீது வாசனை எண்ணெய்களை தடவுவார்கள்.

உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும்

உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில்( canopic jars)வைக்கப்படும்.

உடலை பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள் தலை கைகள் கால்கள் உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.பின்னர் மம்மியை அடக்கம் செய்வர்.

No comments:

Powered by Blogger.