நிழல் இல்லாத நாள்:- ZERO SHADOW DAY பற்றி தெரிந்து கொள்வோம்
நிழல் இல்லாத நாள்:-
ZERO SHADOW DAY-AUGUST.
செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம் கண்ணுக்குத் தெரியாது (அதாவது வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே சூரியன் மிகச்சரியாக நம் தலைக்கு மேலே வரும் அந்த நாட்கள் மட்டும் நிழல் முழுவதுமாக மறையும்) அந்த நாளை நாம் நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் என்கிறோம்.
மேலும் மகர ரேகைக்கு 23.45 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.45 டிகிரி வடக்காகவும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிழலில்லா நாளை காணமுடியும்.
இந்த நிழல் இல்லாத நாள் ஆனது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வது இல்லை, அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாட்களில் நிகழும். எனவே இன்று ஆகஸ்ட்-19 ஆம் தேதி ஆம்பூர், ஓசூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி வாணியம்பாடி, ஆரணி, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் இந்த நிகழ்வை காணலாம்.
எளிய சோதனையாக செய்யலாம்:-
ஒரு சமமான தரையில் உருளை வடிவில் உள்ள பொருட்களை செங்குத்தாக நிறுத்தவும், இந்த சோதனையை நண்பகல் ஆரம்பிக்கும் முன்பே
(பகல் 12 மணிக்கு) செய்ய வேண்டும். ஆரம்பத்தில் நிழல் மேற்கு திசையில் விழும், பிறகு நேரம் செல்ல செல்ல நிழலின் நீளம் குறைந்து சரியாக நண்பகலில் நிழல் முற்றிலுமாக அந்த பொருட்களின் மீதே மறைவதை காணலாம்.
இந்த நிழலை கொண்டுதான் முற்காலத்தில் நேரம் கணக்கிடப்பட்டது.
இந்த நிழல் இல்லா நாளை கடந்த ஏப்ரல் மாதமும், தற்போது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் தமிழகத்தில் காணலாம்.
மாணவர்களுக்கு ஏற்படும் பயன்கள்:-
பல்வேறு பொருட்களின் நிழலின் நீளங்களை உற்றுநோக்குவது என்பது சிறந்த கற்றல் அனுபவமாகவும், மகிழ்வான செயல்பாடாகவும் இருக்கும்.

No comments: