இந்த மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் போன்றவற்றிலிருந்து தவிர்க்க சாப்பிடக்கூடிய உணவு வகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்?
மழைக்காலத்தில் தட்பவெட்ப நிலை மாற்றத்தால் ஜலதோஷம் தொடங்கி காய்ச்சலால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சைனஸ், ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் அதிகம் அவதியுறுகின்றனர். மழைக்காலத்தில் ஜலதோஷம், காய்ச்சல் நம்மை அணுகாமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்ப்போம்.
பொதுவாக மூன்றுவேளையும் சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
காலை உணவின்போது தூதுவளை சட்னி, துவையல், இஞ்சித் துவையல் சேர்த்துக்கொள்ளலாம்.
மதிய உணவில் கொள்ளுத் துவையல், கொள்ளு ரசம், மிளகு ரசம், கண்டதிப்பிலி ரசம் சேர்த்து கொள்ளலாம்.
சுக்கு வெந்நீர் அல்லது சுக்கு காபி பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.
ஜலதோஷம், சைனஸ் மற்றும் அலர்ஜி உள்ளவர்கள் நீர்க்காய்கறிகளை தவிர்ப்பது நல்லது. அப்படியே சேர்த்துக்கொண்டாலும் மிளகு கொஞ்சம் அதிகமாகச் சேர்த்து சூடாகச் சாப்பிடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் பழங்களுடன் மிளகுத்தூள் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.
காய்கறிகளில் செய்த சூப்பில் மிளகுத்தூள் சேர்த்துச் சாப்பிடலாம். நாட்டுக்கோழி, நண்டு, ஆட்டுக்கால் சூப் செய்து சாப்பிடுவது நல்லது. இரவில் பூண்டுப்பால் அருந்துவது பலன் தரும்.
இரவில் தயிர், கீரை போன்றவற்றை தவிர்த்து மிளகு, சீரகம். கடலைப்பருப்பு, கொள்ளுப் பயறு சேர்த்து வறுத்துப் பொடியாக்கி அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மாலைவேளைகளில் வடை, போண்டா, பஜ்ஜி சாப்பிடுவதைத் தவிர்த்து கல்யாண முருங்கை வடை, கற்பூரவல்லி பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

No comments: