Breaking

திணை அரிசி சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் பயன்களை அறிவோம்





தினை அரிசி, சிறு தானிய வகைகளில் மிக முக்கியமான ஒன்று ஆகும்.இதனை உண்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இதனை சீனா மற்றும் இந்தியா நாடுகளில் மிக அதிக அளவு பயிரிடப்படுகின்றது. இப்பொழுது நாம் தினமும் தினை அரிசி உண்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி காண்போம்
தினை அரிசியில் கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

தினை அரிசியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. அரிசியை காட்டிலும் பலமடங்கு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்பொழுது நாம் தினை அரிசியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை பற்றி காண்போம்.
தினை அரிசியில் அரிசி மற்றும் ராகியை விட அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

தினமும் உணவாக நீங்கள் தினை அரிசியினை உண்டு வரும்பொழுது உங்களுக்கு ஒரு நாளிற்கு தேவையான நார்சத்து கிடைத்து விடும்.
தினை அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் தினமும் நீங்கள் இதனை உண்டு வரும்பொழுது உங்கள் உடல் எடை குறைக்க உதவும். எனவே நீங்கள் அரிசிக்கு பதிலாக தினை அரிசி உண்டு வரவும்.
தினை அரிசி குறைந்த அளவு கிளைசெமிக் உடையது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்கள் உடலில் சர்க்கரை உறிஞ்சுவது தாமதமாக ஏற்படும். தினமும் இதனை உங்கள் உணவில் நீங்கள் சேர்த்து வந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்க உதவும்.
தினை அரிசியில் அதிக அளவு புரத சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்களின் உடல் வளர்ச்சி சீராக அமையும். மேலும் உங்களின் முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

தினை அரிசியின் பொன்னிறம் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்களின் கண் மற்றும் முடியின் மேம்படும். மேலும் உங்களை ஆரோக்கியமுடன் வாழ வழிவகுக்கும். எனவே தினை அரிசியினை தினமும் உண்டு வாருங்கள் நண்பர்களே.
தினை அரிசியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து உங்க;லாய் எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். எனவே எப்பொழுதும் இளமையுடன் இருக்க தினமும் தினை அரிசி உட்கொள்ளுங்கள்.
கால்சியம் சத்துக்கள் தினை அரிசியில் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும்.
இவ்வளவு நன்மைகள் தினை அரிசி போன்ற சிறுதானியங்களில் அதிக அளவில் உள்ளதால் அரிசி போன்ற தானியங்களை தவிர்த்து சிறுதானியங்களை உண்டு வாருங்கள்.

No comments:

Powered by Blogger.