1895 X கதிர்கள் பற்றிய கண்டுபிடிப்பை வில்லெம் ரோண்ட்ஜன் வெளியிட்ட தினம்...
10:45
Read
👌👌👌👌👌👌👌👌
1895 - பல்வேறு விதமான வெற்றிடக்குழாய் கருவிகளின் வழியே மின்னாற்றல் செல்லும்போது ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, வில்லெம் ராண்ட்ஜென் என்ற ஜெர்மானியப் பொறியாளர், எதிர்பாராத விதமாக, எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார். இதுரை அறிந்திராத ஒரு புதியவகைக் கதிர்கள் என்பதை உணர்ந்த ராண்ட்ஜென், அதனைப் பற்றி எதுவும் தெரியாததால், ஆய்வு செய்து உரிய பெயரிடும் வரை தற்காலிகமாக எக்ஸ் கதிர்கள் என்று பெயரிட்டார். பின்னர் ராண்ட்ஜென் கதிர்கள் என்று பெயரிடப்பட்டாலும், எக்ஸ் கதிர்கள் என்ற பெயரே நிலைத்துவிட்டது. அடுத்தடுத்த வாரங்களில் தொடர்ந்த ஆய்வில், அவர் முதலில் கண்டது, அவரது சொந்த எலும்புக்கூட்டின் உருவத்தையே. அவ்வாறு தான் கண்டது அக்கதிர்களின் உண்மையான பண்பாக இல்லாமல் போனால் தனது நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும் என்று அஞ்சிய அவர், இச்சோதனைகளை அதன்பின்னர் ரகசியமாகவே மேற்கொண்டார். இரண்டு வாரங்கள் கழித்து, எந்தச் சூழ்நிலையில் இக்கதிர்கள் உருவாகி, எந்த வகைத் தகட்டின்மீது அந்த விளைவைத் தருகின்றன என்று புரிந்துகொண்டபின் அவர் எடுத்த முதல் எக்ஸ் ரே படம், அவரது மனைவி அன்னா பெர்த்தா-வின் கையை! அதைப் பார்த்த அவரது மனைவி, தனக்கு மரணம் வந்துவிட்டது என்று அழுது புலம்பியது தனிக்கதை! இதன்பின், 1895 டிசம்பர் 28 அன்று 'ஒரு புதிய வகைக் கதிர்கள்' என்ற ஆய்வறிக்கையை ராண்ட்ஜென் வெளியிட்டார். சிகிச்சைகளில் உள்ளுறுப்புக்களைப் பார்த்து சிகிச்சையளிக்கும் முறையை எக்ஸ் கதிர்களின் கண்டுபிடிப்புத்தான் துவக்கி வைத்தது. அதனால்தான், ராண்ட்ஜென் ரேடியாலஜியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். எக்ஸ் கதிர் (ரேடியோகிராம்) படங்கள் ராண்ட்ஜெனோகிராம் என்று அழைக்கப்படுகின்றன. இக்கண்டுபிடிப்புக்காக உர்ஸ்பர்க் பல்கலைக்கழகம், பொறியாளரான அவருக்கு மருத்துவத்துறையில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 1901இல் இயற்பியலுக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு மனிதகுலத்திற்கே பயன்பட வேண்டியது என்று கருதிய ராண்ட்ஜென், இதற்கு காப்புரிமை பெற மறுத்துவிட்டார்.
👌👌👌👌👌👌👌👌
1895 X கதிர்கள் பற்றிய கண்டுபிடிப்பை வில்லெம் ரோண்ட்ஜன் வெளியிட்ட தினம்...
Reviewed by JAYASEELAN.K
on
10:45
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
10:45
Rating: 5
Tags :
EVENTS


No comments: