வைட்டமின், 'டி' சத்து குறைவுடன் பிறக்கும் குழந்தைக்கு, பிற்காலத்தில் ஸ்கிட்சோபெர்னியா எனப்படும் மனச் சிதைவு நோய் வரும் வாய்ப்புகள்
வைட்டமின், 'டி' சத்து குறைவுடன் பிறக்கும் குழந்தைக்கு, பிற்காலத்தில் ஸ்கிட்சோபெர்னியா எனப்படும் மனச் சிதைவு நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் என, ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
தற்போது மனச் சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள், பிறந்த சமயத்தில் பதிவு செய்யப்பட்ட மருத்துவ அறிக்கைகளை அடிப்படையாக வைத்து, ஆராய்ச்சியாளர்கள் இந்த தகவலை கண்டறிந்துள்ளனர்.
குழந்தைக்கு வைட்டமின், 'டி' சத்து கிடைப்பது தாயின் உடலிலிருந்து தான். எனவே, பேறுகாலத்தில் தாயின் உடலில் செறிவாக வைட்டமின், 'டி' இருப்பதை உறுதி செய்தால், பிறக்கும் குழந்தை வளர்ந்த பிறகு மனச் சிதைவு வருவதை தடுக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

No comments: