Breaking

கிரகணம் என்றால் என்ன... கிரகணம் எவ்வாறு நிகழ்கிறது என்பது பற்றி பார்ப்போம்


கிரகணம் என்பது சாதாரணமாக வானில் நடக்கும் ஒரு நிகழ்வு அதாவது ஒரு பொருள் தொலைவில் உள்ள ஒரு பொருளில் இருந்து வரும் வெளிச்சத்தை பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம் இந்த வெளிச்சத்தை ஒரு பொருள் கடக்கும்போது வெளிச்சம் வரும் பொருளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கும் எந்த அளவுக்கு மறைக்கும் என்பது மறைக்கும் பொருளின் அளவையும் தூரத்தையும் பொறுத்து இதற்கு நாம் பல உதாரணங்களைச் சொல்ல முடியும் நாம் சினிமா அரங்கில் படம் பார்க்கும் போது யாராவது குறுக்கே சென்றால் அவர்கள் தலை சினிமா திரையில் விழும் அதாவது புரஜக்டர் அறையில்
இருந்து வரும் ஒளியை ஒருவர் தலை மறைத்து நிழல் விழுகிறது என்பதை நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும் இது போன்றதுதான் கிரகணம் நிகழும்..


கிரகணம் எவ்வாறு நிகழ்கிறது

சாதாரணமாக கோள்கள் எல்லாம் அதனதன் பாதையில் சுற்றி வருகின்றன நிலவும் தனது சுற்றுப்பாதையில் பூமியையும் பூமி தனது சுற்றுப்பாதையில் சூரியனையும் சுற்றி வருவது போல சில நேரங்களில் நிலவு அல்லது பூமி சூரிய வெளிச்சத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மறைப்பது உண்டு பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நேர்கோட்டுப் பாதையில் அமையும் பொழுது சூரிய கிரகணம் நடக்கிறது அதேபோல் சூரியன் பூமி நிலவு நேர்கோட்டுப் பாதையில் அமையும் போது பூமியின் நிழல் நிலவை மறைக்கும் இந்த நிகழ்வு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.