சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் ஏன் ஏற்படுகின்றன ஒரு வருடத்தில் எத்தனை முறைகள் நடக்கும்
பூமியும் நிலவும் சுயமாக ஒளி கொடுக்க கூடிய பொருள்கள் அல்ல ஆனால் இவைகளால் சூரிய வெளிச்சத்தில் நிழல்களை உருவாக்க முடியும் சில நேரங்களில் இவற்றில் ஏதாவது ஒன்றின் நிழல் மற்றொன்றின் மீது விழும்போது சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன இந்த நிழல்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அந்தப் பொருளை மறைக்கும் போது பகுதி அல்லது முழு சூரிய கிரகணங்கள் ஏற்படுகின்றன..
அதிகப்படியாக ஒரு வருடத்தில் 7 கிரகணங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது இதில் 4 அல்லது 5 சூரிய கிரகணங்களும் இரண்டு அல்லது மூன்று சந்திர கிரகணங்களும் நடப்பதற்கு வாய்ப்புண்டு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு இரண்டு சூரிய கிரகணங்கள் நடக்கும் அதே சமயம் ஒரு சந்திர கிரகணங்கள் கூட நடைபெறாமல் இருக்கும் குறிப்பு:- பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முழு சூரிய கிரகணம் சராசரியாக 370 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்


No comments: