புதிய ராக்கெட் ஏவுதளம் ஒன்று அமைப்பதற்கு குலசேகரப்பட்டினம் சிறந்த இடமாக தேர்வு செய்யப்பட்டது ஏன்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்கனவே இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ள நிலையில் மேலும் ஒரு ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் இதற்கு சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்ட குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் வேலை துவங்கியுள்ளது.
நேராக தெற்கு நோக்கி ராக்கெட் ஏவ வேண்டும் என்றால், ஏவுதளம் தமிழத்தின் மையப்பகுதி கடற்பகுதியில் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேராக தெற்கு நோக்கி எஆக்கெட் ஏவ முடியாது என்பதால், குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments: