ஆசிரியர்கள் அவர்களுக்கு இவற்றைப் பற்றிய ஆலோசனையும் வழங்கலாம்தேவை அதிகரித்துவரும் விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர் கல்வி
தேவை அதிகரித்துவரும் விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர் கல்வி
ஒவ்வொரு நாடும் விளையாட்டுக்கும், வீரர்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்தியாவும் சமீபகாலமாக விளையாட்டு நலனில் அதிக அக்கறை காட்டத் தொடங்கி இருக்கிறது.
மக்களின் மனநிலையிலும் விளையாட்டின் முக்கியத்துவமும், உடல் நலனின் அக்கறையும் அதிகரித்து உள்ளது. அதனால் ஆரோக்கிய பழக்கவழக்கங்களை பின்பற்றுபவர்கள் பெருகி வருகிறார்கள்.
மக்களின் இத்தகைய மாற்றத்தால் நாள்தோறும் ஊட்ட நிபுணர் (நியூட்ரிசியன்) தேவை அதிகரித்து வருகிறது. பொது ஊட்ட நிபுணர் மட்டுமல்லாது குழந்தை நலன், மகளிர் நலன், முதியோர் நலன், நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டவர்களுக்கான சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர், விளையாட்டு வீரர்களின் தேவைக்கான ஸ்போர்ட்ஸ் நியூட்ரிசியன் என இதன் உட்பிரிவுகளாக பல்வேறு சிறப்பு நிபுணர்கள் தேவை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர விரும்பும் பெற்றோர்கள் அவர்களை விளையாட்டில் சோபிக்கச் செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷன் தேவை எதிர்பார்ப்பு மிக்கதாக உள்ளது. சமீபத்தில் மருத்துவர்களின் தேவை இந்தியாவில் போதிய அளவில் இல்லை என்ற புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஸ்போர்ட்ஸ் நியூட்ரீசியனுக்கான தேவை எதிர்காலத்தில் நிச்சயம் அதிக அளவில் தேவைப்படும். எனவே இதற்கான படிப்பு வரவேற்புக்குரிய படிப்பாக மாறி உள்ளது.
உலக அளவில் ஸ்போர்ட்ஸ் மெடிசன் தனித்துறையாக வளர்ந்துள்ளது. விளையாட்டு தொடர்பான கண்டுபிடிப்புகள், மருத்துவ கருவிகள், சிகிச்சைகள் இவையெல்லாம் அதன் உட்பிரிவாக விரிவடைகின்றன. விளையாட்டு பயிற்சி நிறுவனங்களில் பிரத்யேக மருந்தகங்கள், சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் இதுபோன்ற மாற்றங்கள் மெல்ல மெல்ல அவசியமாகி வருகின்றன.
இதை ஈடுகட்டும் வகையில் நியூட்ரிசியன் தொடர்பான பல்வேறு படிப்புகள் இந்திய கல்வி நிறுவனங்கள் வழங்கப்படுகின்றன. ஸ்போர்ட்ஸ் நியூட்ரிசியன் படிப்பு 2 ஆண்டு கள் கொண்ட முதுநிலை டிப்ளமோ படிப்பாக வழங்கப்படுகிறது. மத்திய விளையாட்டு அறிவியல் துறையின் கீழ் ஐதராபாத்தில் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நியூட்ரிசியன் கல்வி மையம் முதுநிலை பட்டப்படிப்பாகவும் இந்த பாடத்தை வழங்குகிறது.
பொதுவாக டயட்டீசியன் தொடர்பான படிப்புகளை படிக்க விரும்புபவர்கள், பிளஸ்-2விற்குப் பிறகு ஏதேனும் ஒரு அறிவியல் பட்டப்படிப்பை நிறைவு செய்ய வேண்டும். பின்னர் நியூட்ரிசியன் பட்டப்படிப்பு படிக்கலாம். அதற்குப் பிறகு இந்தியன் டயட்டிக் அசோசியேசன் நடத்தும் நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற்று, தங்களை ஊட்டச்சத்து நிபுணராக கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். எம்.பி. பி.எஸ். மருத்தவம் படித்தவர்களும் நியூட்ரிசியன் டிப்ளமோ படிப்பு படிக்கலாம்.
மருத்துவம் சார்ந்த துறையில் தங்கள் வாழ்க்கைப்பாதை அமைய வேண்டும் என நினைப்பவர்கள் இந்த படிப்பையும் தேர்வு செய்து சாதிக்க முடியும். www.nin.res.in என்ற இணையதளத்தில் நியூட்ரிசியன் துறை தொடர்பான பல்வேறு உட்பிரிவு படிப்பு களை பார்க்கலாம்.
No comments: