மாணவர்கள் சிறுநீர் சரியான நேரத்தில் செல்ல வேண்டியது அவசியம் இல்லையென்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்
இன்றுள்ள பெரும்பாலானோர் பல விதமான காரணத்திற்காக சிறுநீரை கழிக்காமல்., அடக்கி வைத்து கொண்டு இருக்கின்றனர். மேலும்., பலர் பொது கழிவறைகளின் அவல நிலையால்., பொது கழிப்பறைகளை சிறுநீர் கழிக்க கூட உபயோகம் செய்வதை தவிர்ப்பதும் நிகழ்ந்து வருகிறது. இந்த பிரச்சனையை பொறுத்த வரையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவு பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.
மேலும்., ஆண்களை பொறுத்த வரையில்., சிறுநீர் அவசரமாக வரும் பட்சத்தில் சாக்கடை ஓரங்கள் மற்றும் கரண்டு கம்பங்கள் என எங்காவது சென்று சிறுநீரை கழித்துவிடுவார்கள். பெண்கள் இவ்வாறு செய்வது இயலாத காரியமாகும். இதன் காரணமாகவே ஆண்களை விட பெண்களின் சிறுநீரை அடக்கும் திறனை அதிகளவு உள்ளவாறு கடவுள் படைத்துள்ளார்.
இவ்வாறு ஆண் - பெண் என இருபாலரும் சிறுநீரை அடக்கும் பட்சத்தில்., பல்வேறு உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது. சிறுநீரை அடக்குவதால் சிறுநீரகத்தில் அழுத்தம் அதிகரித்து., வடுக்கள் ஏற்படுகிறது. இது எதிர்காலத்தில் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் சிறுநீரக கற்கள் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சிறுநீரில் அழுத்தம் அதிகரிக்கும் சமயத்தில்., சிறுநீரக வலி ஏற்படுத்தி., சிறுநீர் கழிக்கும் சமயத்தில் அதிகளவு வலியானது ஏற்படும் சூழ்நிலை ஏற்படும். மேலும்., சிறுநீர் பையின் அளவு அதிகரித்து., சிறுநீரகத்தின் சதைகளை அதிகரிக்கும். இதனால் சிறுநீரை கட்டுக்குள் வைக்கும் திறனானது வெகுவாக பாதிக்கும். மேலும்., அறுவை சிகிச்சை செய்யும் பாதிப்பும் ஏற்படலாம்.
மேலும்., சிறுநீரகத்தை அடக்கி வைப்பதன் மூலமாக சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும் அச்சமும் இருக்கிறது. மேலும்., சுத்தமில்லாத கழிவறையை உபயோகம் செய்தல்., சிறுநீரக பாக்டீரிய தொற்றுக்கும் வழிவகுக்கும். மேலும்., சிறுநீரக பையிலும் பாதிப்பு ஏற்படும்.
No comments: