நாம் அதிகம் பயன்படுத்தும் உணவு வகைகளில் யோகர்டு பற்றி அறிவோம்
நாம் அதிகம் பயன்படுத்தும் உணவு வகைகளில் யோகர்டும் ஒன்றாகும். இந்த சுவையூட்டப்பட்ட தயிரை அனைவரும் விரும்புகிறோம்.
சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கிய விஷயத்திலும் யோகர்ட் சிறந்ததாகும்.
நம்முடைய மேனிக்கு அழகூட்டும் பண்புகளும் யோகர்ட்டுக்கு இருக்கிறது .
மேலும் சொல்லப்போனால் புரோட்டீன் என்னும் புரதம், கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து, மெக்னீசியம், வைட்டமின் பி12, உடலுக்கு இன்றியமையாத கொழுப்பு அமிலங்கள் ஆகியவை யோகர்ட்டில் அடங்கியுள்ளன.
ஆதலால் , நம்முடைய சருமத்திற்கும், கூந்தலுக்கும் யோகர்ட் அதிகமாக மெருகூட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: