டிரான்சிஸ்டர் (TRANSISTOR) வரலாறு மற்றும் பெயர் சூட்டியவர் யார்..
அறிவோம் அறிவியல்..
டிரான்சிஸ்டர் (TRANSISTOR)..
இது அடிப்படையான மின் குறிப்பலை பெருக்கியாகவும், மின் குறிப்பலைகளை வேண்டியவாறு கடத்தவோ அல்லது கடத்தாமல் இருக்கவோச் செய்யப் பயன்படும் நிலைமாற்றிகளாகவும் (switches) பயன்படும் ஓர் அரைக்கடத்திக் கருவி ஆகும்.
இன்றைய கணினிகள், அலைபேசிகள் முதல் கணக்கற்ற மின்னனியல் கட்டுப்பாட்டுக் கருவிகள் யாவும் இந்தத் டிரான்சிஸ்டர் பின்னிப் பிணைந்த மின்சுற்றுகளால் ஆனவை.
இதனைக் கண்டுபிடித்தவர்களுக்கு 1956 இல் கூட்டாக இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
வரலாறு:-
வெப்ப மின்னணு மும்முனையம் 1907 இல் புதிடாகப் புனையப்பட்டது.
இதனால் வானொலித் தொழில்நுட்பமும் நெடுந் தொலைவுத் தொலைபேசித் தொழிநுட்பமும் வளர்ந்தது. அனால், இந்த மும்முனையன் கணிசமான மின்னாற்றலை உறிஞ்சியது.
வில்லியம் எக்கிளெசு படிக இருமுனைய அலையாக்கியைக் கண்டுபிடித்தார்.
செருமானிய இயற்பியலாளர் 1925 இல் ஜூலியசு எட்கர் இலில்லியன்பெல்டு புல விளைவு டிரான்சிஸ்டர் பதிவுரிமம் கோரி விண்னப்பித்தார். இது வெற்றிடக்குழல் மும்முனையத்துக்கு ஈடான திண்மநிலை அல்லது மின்னனியல் பதிலியாக விளங்கியது.
இவரே அமெரிக்காவிலும் இதற்கான பதிவுரிமத்துக்கு 1926 இல் விண்ணப்பித்தார்.
ஆசுகர் கைல் 1934 இல் செருமனியில் இதையொத்த கருவியைப் புதிதாக தானும் தனியே புனைந்துள்ளார்.
ஜான் பர்தீனும் வால்டேர் பிரட்டைனும் 1947 நவம்பர் 17 முதல் 1947 திசம்பர் 23 வரை அமெரிக்கா, நியூஜெர்சி முரேகில்லில் அமைந்த AT&T தொழில்குழுமத்தின் பெல் ஆய்வகத்தில் பல் செய்முறைகளைச் செய்து, செருமானியப் படிகத்தின் இரு பொன்னாலான புள்ளிகளுக்கு இடையில் மின்வழங்கலைத் தரும்போது உள்ளீட்டி தரும் குறிகையை விட வெளியீட்டில் பேரளவு குறிகை உருவாதலை நோக்கிப் பதிவு செய்தனர்.
திண்மநிலை இயற்பியலின் தலைவராகிய வில்லியம் சாக்ளே இதன் மின்னழுத்த்த்தைக் கண்டறிந்தார் அடுத்த சில மாதங்களில் அரைக்கடத்திகள் (ஒருபால் கடத்திகள்) பற்றிய அறிவுத்தளத்தை பெரிதும் விரிவுபடுத்தினார். திரிதடையம் (transistor) என்ற சொல்லை ஜான் ஆர். பியர்சு திரிதல்தடையம் (transresistance) என்ற சொல்லுக்கான சுருக்கமான வடிவமாக அறிமுகப்படுத்தினார்.
பர்தீன் சாக்ளேவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இலில்லியன் ஓடெசனும் விக்கி தாயிட்சியும், திரிதடையப் புலவிளைவு வகைக்கான முதல் உரிமத்தைப் பெற சாக்ளே முன்மொழிந்த்தாகவும் அதில் சாக்ளேவின் பெயரை புதுமைபுனைவாளராக குறிப்பிடச் சொன்னதாகவும் கூறுகின்றனர்.
சில ஆண்டுகளாக கிடப்பில் அறியப்படாமல் இருந்த இலில்லியன்பெல்டுவின் கண்டுபிப்பும் பதிவுரிமங்களும் வெளிக்கொணரப்பட்டதும், பெல் ஆய்வகச் சட்ட அறிவுரையாளர்கள் சாக்ளே முன்மொழிவுக்கு எதிராக வாதிட்டனர்.
ஏனெனில், புலவிளைவு டிரான்சிஸ்டர் எண்ணக்கரு புதிதல்ல; மேலும் பர்தீனும் பிரட்டைனும் சாக்ளேவும் 1947 இல் புள்ளித் தொடுகைத் திரிதடையத்தை தான் உண்மையில் வடிவமைத்துள்ளனர்.
சாக்ளே, பர்தீன், பிரட்டைன் ஆகியோரின் இந்த புதிய வடிவமைப்புக்காக இவர்கள் மூவரும்1956 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை அரைக்கடத்திகளின் ஆய்வுக்காகவும் திரிதடையவிளைவைக் கண்டறிந்ததற்காகவும் பெற்றனர்.
வகைகள்:-
Bipolar transistor,
Field Effect Transistor


No comments: