Home
JANUARY
ஜனவரி-04. பிரெய்லி (Braille) எழுத்து முறையைக் கண்டறிந்த பிரான்ஸ் நாட்டுக்காரர்- லூயி பிரெய்ல் (Louis Braille) பிறந்த தினம்.
ஜனவரி-04. பிரெய்லி (Braille) எழுத்து முறையைக் கண்டறிந்த பிரான்ஸ் நாட்டுக்காரர்- லூயி பிரெய்ல் (Louis Braille) பிறந்த தினம்.
23:57
Read
இன்று பிறந்த நாள்:- ஜனவரி-04.
பிரெய்லி (Braille) எழுத்து முறையைக் கண்டறிந்த பிரான்ஸ் நாட்டுக்காரர்- லூயி பிரெய்ல் (Louis Braille) பிறந்த தினம்.
பிறப்பு:-
பிரான்ஸின் பாரீஸ் நகருக்கு அருகே உள்ள கூப்வெரி கிராமத்தில் ஜனவரி-04,1809 ஆம் ஆண்டு பிறந்தார். தனது 3 வது வயதில் ஊசியை வைத்து விளையாடிய
போது, கண்ணில் குத்தி காயம் ஏற்பட்டு, கண் பார்வையை இழந்தார். நாளடைவில் கண் நோயால் (Sympathetic Ophthalmia)
பாதிக்கப்பட்டு இன்னொரு கண்ணிலும் பார்வையை இழந்தார். தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டும், தொட்டும், முகர்ந்து பார்த்தும் அறிந்துகொண்டார். பார்வையற்றோருக்கான ‘ராயல் இன்ஸ்டிடியூட் ஃபார் பிளைண்ட் யூத்’ பள்ளியில் பயின்றார். அங்கே எழுத்துகளை விரலால் தொட்டு உணர்வதற்கு ஏற்ப அவற்றை மேடாக்கிப் புத்தகங்கள் தயாரித்து மாணவர்களுக்கு கல்வி வழங்கினார்கள்.
அனைத்து எழுத்துகளும் மேடாக இருப்பதால், பெட்டிகள் போல புத்தகங்கள் தடிமனாக இருக்கும். மொழிகள், இலக்கணம், இசை, கணிதம், கைத்தொழில் பயிற்சி அனைத்தும் இந்த முறையிலேயே கற்பிக்கப்பட்டன. இரவு நேரம் போர்க்களத்தில் ராணுவத்தினர்
ரகசியத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ‘நைட் ரைட்டிங்’ முறையை பற்றி சார்லஸ் பார்பியர் என்ற ராணுவத் தளபதி அந்த பள்ளிக்கு வந்து விளக்கம் அளித்தார். அந்த எழுத்துமுறை 12 புள்ளிகளைக் கொண்டிருந்தது.
மேலும் இந்த முறையை மாணவர்களுக்கு
கற்பிக்கப்பட்டன.இதிலும் சற்று சிரமமாகவும், மெதுவாகவும்
படிக்க முடிந்தது. இதற்கு மாற்றாக எளிதாகவும், வேகமாகவும் சிரமம் இல்லாமல் பயில புதிய முறையை உருவாக்க முயற்சி செய்தார்.
கண்டுபிடிப்புகள்:-
அயராது பாடுபட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். புள்ளிகளைப் பலவிதமாக மாற்றி மாற்றி அமைத்து, பரிசோதனைகள் செய்து, புதிய குறியீட்டு மொழியை உருவாக்கினார். இதற்கு 6 புள்ளிகளை மட்டும் பயன்படுத்தி உருவாக்கினார். இவற்றில் பாடங்கள், சூத்திரம், அறிவியல் கோட்பாடு, கணக்கு, இசைக்குறிப்பு, கதை, கட்டுரை, நாவல் என எல்லாவற்றையும் எழுதியும், படிப்பது போலவும் உருவாக்கினார். இவர் கண்டறிந்த பார்வையற்றவர்களுக்கான கல்வி முறையானது, பார்வையற்றவர் களுக்கு மிகவும் உதவிகரமான மற்றும் சுலபமான முறையாகவும் இருந்தது.
இதனால் இவரது கண்டுபிடிப்பை பாராட்டும் விதமாக இயக்குநர் அவர்கள் அதே பள்ளியில் அறிமுகம் செய்தார்.
பணிகள்:-
பட்டப்படிப்பு முடித்த பிறகு, அதே பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
நூல்கள்:-
6 புள்ளிகள் கொண்ட பிரெய்ல் முறையின் முதல் புத்தகத்தை 1829 ஆம் ஆண்டு வெளியிட்டார். மேலும் இந்த முறையைப் பயன்படுத்தி ‘ஹிஸ்டரி ஆஃப் பிரான்ஸ்’ என்ற நூலை இவரது பள்ளி நிர்வாகம் 1837 ஆம் ஆண்டு வெளியிட்டது.
மறைவு:-
இவர் தனது நண்பன், பியரியுடன் இணைந்து பிரெய்லி தட்டச்சு இயந்திரத்தை தயாரித்து, பார்வையற்றவர்கள் படிக்க உதவிய இவர், ஜனவரி-06,
1852 ஆம் ஆண்டு பாரிஸ், பிரான்சில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
உலக நாடுகள் பலவும் இவரது அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயங்கள் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளன.
இந்திய அரசும் இவரது படம் பொறித்த 2 ரூபாய் நினைவு நாணயத்தை
வெளியிட்டு பெருமைப்படுத்தியது.
ஜனவரி-04. பிரெய்லி (Braille) எழுத்து முறையைக் கண்டறிந்த பிரான்ஸ் நாட்டுக்காரர்- லூயி பிரெய்ல் (Louis Braille) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
23:57
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
23:57
Rating: 5
Tags :
JANUARY


No comments: