Breaking

ஜனவரி-04. சுரோடிங்கர் சமன்பாடு, சுரோடிங்கர்-நியூட்டன் சமன்பாடு மற்றும் குவான்டம் இயற்பியலின் முன்னோடியுமான ஆஸ்திரிய இயற்பியலாளர்- எர்வின் ருடால்ப் ஜோசப் அலெக்சாண்டர் ஷ்ரோடிங்கர் (Erwin Rudolf Josef Alexander Schrodinger) மறைந்த தினம்

இன்று நினைவு நாள்:- ஜனவரி-04.

சுரோடிங்கர் சமன்பாடு,
சுரோடிங்கர்-நியூட்டன் சமன்பாடு மற்றும்
குவான்டம் இயற்பியலின் முன்னோடியுமான
ஆஸ்திரிய இயற்பியலாளர்-
எர்வின் ருடால்ப் ஜோசப் அலெக்சாண்டர் ஷ்ரோடிங்கர்
(Erwin Rudolf Josef Alexander Schrodinger)
மறைந்த தினம் 

பிறப்பு:-

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில்
ஆகஸ்ட்-12, 1887 ஆம் ஆண்டு
பிறந்தார். இவர் வீட்டிலேயே ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளை கற்றார்.
1921 இல், ஜூரிச் பல்கலைக்கழகத்திற்கு சென்று பயின்றார். பிறகு 1927 ஆம் ஆண்டில் பெர்லினில் உள்ள ஃபிரீட்ரிச் வில்ஹெல்ம் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மாக்டலன் கல்லூரியில் சேர்ந்தார்.
வியன்னா பல்கலைக்கழகத்தில் பயின்று 1910 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்:-

வியன்னா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் ஆராய்ச்சியாளர் பதவியை ஏற்றார். 
முதல் உலகப் போரின்போது, ராணுவத்தில் பணியாற்றினார். 
ஜெனா, ஸ்டுட்கார்ட், பிரஸ்லாவ் கல்லூரிகளில் பணிபுரிந்தார். பிறகு, ஜூரிச் பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார்.
கோட்பாட்டு இயற்பியலில் ஆராய்ச்சிகள் செய்து பல கட்டுரைகளை வெளியிட்டார். தனது ஆசிரியர் ஃபிரென்ஸ் எக்ஸ்னருடன் இணைந்து பணியாற்றினார். 

கண்டுபிடிப்புகள்:-

அதிர்வலைகள் கோட்பாடு, பிரௌனியன் இயக்கம், கணிதப் புள்ளியியல், அணுவியல் கோட்பாடுகள் குறித்தும் ஆராய்ந்தார்.
ஷ்ரோடிங்கர் அலை சமன்பாட்டை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளை 1926 ஆம் ஆண்டு தொடங்கினார். அணுவில் உள்ள பொருட்களின் அலைப்பண்பு இயக்கத்தை விளக்கும் அடிப்படைச் சமன்பாட்டை நிறுவினார். நியூட்டனின் விதிகளுக்கு இணையான முக்கியத்துவம் பெற்றதாக ஷ்ரோடிங்கர் சமன்பாடு கருதப்படுகிறது. 
எலெக்ட்ரான் குவான்டம் நிலையில் துகள்களாகவும், அலைகளாகவும் இரண்டுவிதமாக இயங்கும். சூப்பர் பொசிஷன் எனப்படும் இந்நிலையை இவர், எளிமையான ‘கேட் (பூனை) தியரி’ 
(Schrodinger's cat paradox) மூலம் விளக்கினார்.
புவிஈர்ப்பு விசை, மின்காந்தத் தன்மை குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இயற்பியல், தத்துவம், வரலாற்று அறிவியல் குறித்தும் ஆராய்ச்சி செய்தார். தன் ஆராய்ச்சிகள் பற்றி பல கட்டுரைகளை வெளியிட்டார்.

பதவிகள்:-

இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஃபெலோஷிப் பெற்றார்.

அயர்லாந்தின் டப்ளின் நகரில் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் ஆஃப் டப்ளின் என்று புதிதாக தொடங்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இணைந்தார். அங்கு இயற்பியல் உயர்கல்வித் துறை இயக்குநராக பொறுப்பேற்றார். 

நூல்கள்:-

நேச்சர் அண்ட் தி கிரீக்ஸ் (பண்டைய கிரேக்க அறிவியல் தத்துவங்கள் குறித்த  ஆராய்ச்சிகள்)
வாட் ஈஸ் லைஃப்’, 
‘மை வ்யூ ஆஃப் தி வேர்ல்டு’ நூல்களாகும்.

விருதுகள்:-
 
மேட்டூகி மெடல்- (1927),
இயற்பியல் நோபல் பரிசு- (1933),
மேக்ஸ் பிளாங்க் பதக்கம்-(1937),
1949 இல் ராயல் சொசைட்டி (ForMemRS) வெளியுறவு உறுப்பினர்.
ஆஸ்திரிய அகாடமி ஆஃப் சயின்சஸ்-(1956) போன்ற பல விருதுகளை பெற்றார்.


மறைவு:-

ஜனவரி-04, 1961ஆம் ஆண்டு, 
வியன்னா, ஆஸ்திரியாவில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.