Breaking

ஜனவரி-04 ஈர்ப்பு விசை பற்றி ஆய்வுகள் செய்த அறிவியலாளர், கனிதவியலாளர், தத்துவஞானி-சர் ஐசக் நியூட்டன்(Sir Isaac Newton)பிறந்த தினம்.

இன்று பிறந்த நாள்:- ஜனவரி-04

ஈர்ப்பு விசை பற்றி ஆய்வுகள் செய்த 
அறிவியலாளர்,
கனிதவியலாளர், தத்துவஞானி-சர் ஐசக் நியூட்டன்(Sir Isaac Newton)பிறந்த  தினம்.

பிறப்பு:-

ஜனவரி-04, 1642 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார்.
தனது பாட்டியின் வீட்டில் வளர்ந்த இவர்,
கிராந்தாம் கிராமர் பாடசாலையில் பயின்றார். 
சிறுவயதிலிருந்தே நியூட்டனுக்கு அறிவியலில் ஈடுபாடு இருந்தது, தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். பிறகு  அவரது மாமா உதவியால், 1661 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ், கிறிஸ்த்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.
1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.

பணிகள்:-

1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றினார்.
1669 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரியில் கணக்கியல் பேராசிரியராக பொறுப்பேற்றார். 



கண்டுபிடிப்புகள்:-

நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளான, Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகளை கண்டறிந்தார்.
வளைந்த பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறைகள்  வகுத்துத் தந்தார்.
ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன தொலைநோக்கிகள் நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன.

1665 ஈருறுப்பு தேற்றம், இயக்க விதிகள் மூலம், (classical mechanics) என்னும் துறைக்கு வித்திட்டார். கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் என்பவருடன் சேர்ந்து, வகையீட்டு நுண்கணிதத் துறையின் உருவாக்கத்தில் பங்கு கொண்டார்.

நியூட்டனின் பிரின்சிப்பியாவிலேயே, பின்வந்த மூன்று நூற்றாண்டுகளில் பௌதீக அண்டம் தொடர்பான அறிவியலாளரின் நோக்கில் ஆதிக்கம் செலுத்திய, இயக்க விதிகள், பொது ஈர்ப்பு ஆகியவை உருவாக்கம் பெற்றன. 

இது புவியில் பொருட்களின் இயக்கங்களையும், அண்டவெளியில் உள்ள கோள்கள் முதலிய பொருட்களின் இயக்கங்களையும் ஒரே கோட்பாடுகளின் அடிப்படையில் விவரிக்கலாம் என விளக்கியது.




முப்பட்டைக் கண்ணாடி வெள்ளொளியைப் பிரித்துப் பல நிற ஒளிகளைக் கொண்ட நிறமாலையாகத் தரும் கவனிப்பை அடிப்படையாகக்கொண்டு நிறக் கோட்பாடு ஒன்றையும் உருவாக்கினார். 


ஒலியின் வேகம் குறித்தும் இவர் ஆய்வுகள் செய்தார். 


புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கியவர் இவரேயாவார். இவர் அறிவியல் புரட்சியுடனும், சூரியமையக் கோட்பாட்டின் வளர்ச்சியுடனும் தொடர்புபட்டிருந்தார். கோள்களின் இயக்கத்துக்கான கெப்ளரின் விதிகள் தொடர்பில் கணிதரீதியான நிறுவல்களை வழங்கியதில் நியூட்டனுக்கும் பங்கு உண்டு. வால்வெள்ளி போன்ற விண்பொருட்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்டமாக மட்டுமின்றி, பரவளைவாகவும், அதிபரவளைவாகவும் கூட இருக்கலாம் எனவும் வாதித்து, மேற்படி விதிகளை விரிவாக்கினார்.



நூல்கள்:-

1667- இல் கண்டுபிடிப்புகளை Deanalysis per Aequationes Numeri Terminorum Infinitas இதில் கூறினார்.
Demethodis Serierum of Fluxionum.
1687-Philosophiae Natural is Principia Mathematic நூல் வெளியிட்டார்.
ஆப்டிக்ஸ் (Opticks) (1704)

அரித்மெட்டிகா யுனிவர்சலிஸ்(Arithmetica Universalis) (1707)போன்ற நூல்களும் எழுதியுள்ளார்.

விருதுகள்:-

1703 ஆம் ஆண்டில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1705 ஆம் ஆண்டு  'சர்' பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.



மறைவு:-

அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவராக விளங்கிய இவர்,
1727 ஆம் ஆண்டு, மார்ச்-20 ஆம் தேதி இங்கிலாந்தில் மரணமடைந்தார்.
இலண்டனில் உள்ள Westminster Abbey கல்லறையில் The Best and Invaluable Gem of Mankind என்று எழுதப்பட்டது.

சிறப்புகள்:-

இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன, கடவுள்... நியூட்டன் பிறக்கட்டும் என்றார்...ஒளி பிறந்தது..என்றார் போப் அவர்கள்.

 

No comments:

Powered by Blogger.