Home
JANUARY
ஜனவரி-07. மிதப்புக் கண்ணாடி (The Float Glass) செய்யும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்த இயந்திரத் தொழில்நுட்பவியலாளர்-அலஸ்ட்டயர் பில்கிங்டன் (Sir Alastair Pilkington) பிறந்த தினம்.
ஜனவரி-07. மிதப்புக் கண்ணாடி (The Float Glass) செய்யும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்த இயந்திரத் தொழில்நுட்பவியலாளர்-அலஸ்ட்டயர் பில்கிங்டன் (Sir Alastair Pilkington) பிறந்த தினம்.
08:56
Read
இன்று பிறந்த நாள்:- ஜனவரி-07.
மிதப்புக் கண்ணாடி
(The Float Glass)
செய்யும்
தொழில் நுட்பத்தைக்
கண்டுபிடித்த
இயந்திரத் தொழில்நுட்பவியலாளர்-அலஸ்ட்டயர் பில்கிங்டன் (Sir Alastair Pilkington)
பிறந்த தினம்.
பிறப்பு:-
ஜனவரி-07, 1920
ஆம் ஆண்டு பிறந்தார். சேர்போன் பள்ளியிலும், கேம்பிரிட்ஜ் கிருத்துவக் கல்லூரியில் எந்திர அறிவியலில் பயின்று பட்டம் பெற்றார்.
பணிகள்:-
1947 ஆம் ஆண்டில் பில்கிங்டன் பிரதர்சு கண்ணாடி உற்பத்தி நிறுவனத்தில் தொழில்நுட்ப அலுவலராகச் சேர்ந்தார்.
கண்டுபிடிப்பு:-
சாளரங்கள், வண்டிகள் முதலானவற்றுக்குத் தேவையான உருத்திரிபு இல்லாத கண்ணாடிகளைச் செய்வதற்கு பில்கிங்டன் நிறுவனம் உருவாக்கிய தட்டு வழிமுறை என்னும் ஒரு முறையைப் பயன்படுத்திக் கண்ணாடிகளை உற்பத்தி செய்து வந்தது. இது மிகவும் செலவு கூடியதும், கழிவு அதிகம் கொண்டதுமான ஒரு முறையாக இருந்தது.
தகட்டுக் கண்ணாடி முறை என்னும் இன்னொரு கண்ணாடி உற்பத்தி முறை மலிவானதாக இருந்தாலும் உருத்திரிபு அற்ற தரமான கண்ணாடிகளை உருவாக்குவதற்கு இம்முறை ஏற்றதாக இருக்கவில்லை.
இதனால் இவர் கண்டுபிடித்த மிதப்புக் கண்ணாடித் தொழில்நுட்பமே மலிவானதும் தரமானதுமான கண்ணாடிகளைச் செய்வதற்கு வழி வகுத்தது.
இவரது இந்தக் கண்டுபிடிப்பு 1960 ஆம் ஆண்டுகளில் கண்ணாடித் தொழில் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது. இன்றுவரை கட்டிடத் தொழில் துறையிலும் பிற துறைகளிலும் கண்ணாடி வகித்துவருகிறது.
மிதப்புக் கண்ணாடி:-
உருகிய கண்ணாடியை
உருகிய
உலோகத்தின் மீது மிதக்கவிட்டு உருவாக்கப்படும் கண்ணாடி ஆகும். பொதுவாக
தகரம் என்னும் உலோகம் இதற்குப் பயன்படுகிறது.
ஈயம், உருகுநிலை குறைவான பிற கலப்புலோகங்கள் என்பனவும் பயன்படுத்தப்பட்டது உண்டு. இந்தமுறையில் சீரான தடிப்புக் கொண்டவையும் மட்டமான மேற்பரப்பைக் கொண்டனவுமான கண்ணாடித் தகடுகளை உற்பத்தி செய்ய முடிகிறது. தற்காலத்தில் கட்டிடங்களில் பயன்படும் கண்ணாடிகள் பெரும்பாலும் மிதப்புக் கண்ணாடிகளே. பெரும்பாலான மிதப்புக் கண்ணாடிகள் சோடாச் சுண்ணக் கண்ணாடிகள்
ஆகும். சிறப்புக் கண்ணாடிகளான போரோசிலிக்கேட் கண்ணாடியும்,
மட்டத்திரைக் கண்ணாடிகளும்கூட குறைந்த அளவில் இம்முறை மூலம் உற்பத்தியாகின்றன. இவரது நிறுவனமான பிரித்தானியாவின் பில்கிங்டன் நிறுவனத்தினால் 1950 ஆம் ஆண்டில் முதலில் பயன்படுத்தப்பட்டமையால் மிதப்புக் கண்ணாடி வழிமுறையை
பில்கிங்டன் வழிமுறை என்றும் அழைப்பதுண்டு.
விருதுகள்:-
1970 ஆம் ஆண்டில் இவருக்குப் பிரபுப் பட்டம் வழங்கப்பட்டது.
மறைவு:-
இவர் 1995 ஆம் ஆண்டு, மே-05 ஆம் நாள் மரணமடைந்தார்.
ஜனவரி-07. மிதப்புக் கண்ணாடி (The Float Glass) செய்யும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்த இயந்திரத் தொழில்நுட்பவியலாளர்-அலஸ்ட்டயர் பில்கிங்டன் (Sir Alastair Pilkington) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:56
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:56
Rating: 5
Tags :
JANUARY


No comments: