Home
JANUARY
ஜனவரி-07. ரோபோட், உலகின் முதல் நீர்மின்சார நிலையத்தை உருவாக்கிய இயந்திரப்பொறியாளர், மின்பொறியாளர்-நிக்கோலா தெஸ்லா (Nikola Tesla) மறைந்த தினம்.
ஜனவரி-07. ரோபோட், உலகின் முதல் நீர்மின்சார நிலையத்தை உருவாக்கிய இயந்திரப்பொறியாளர், மின்பொறியாளர்-நிக்கோலா தெஸ்லா (Nikola Tesla) மறைந்த தினம்.
08:55
Read
இன்று நினைவு நாள்:- ஜனவரி-07.
ரோபோட்,
உலகின் முதல் நீர்மின்சார நிலையத்தை உருவாக்கிய
இயந்திரப்பொறியாளர், மின்பொறியாளர்-நிக்கோலா தெஸ்லா (Nikola Tesla) மறைந்த தினம்.
பிறப்பு:-
ஜூலை-10, 1856 இல் ஸ்மில்ஜன், குரோஷியாவில் பிறந்தார். ரெயில்ஸ்லூலில் படித்து முடித்தார்.
கண்டுபிடிப்புகள்:-
1894 இல் கம்பியில்லாத் தொடர்பு (வானொலி) பற்றிய இவரது செயல்முறை விளக்கம்,மின்னோட்டப் போரில் இவர் வெற்றி பெற்ற சாதனை புரிந்தார்.
இவரது தொடக்கப் பணிகள் தற்கால மின் பொறியியலுக்கு முன்னோடியாக அமைந்தன.
நிகோலா டெஸ்லாவின் காப்புரிமைக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி, நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து உயர் அழுத்த மின்சாரம்(Hydroelectric Power Plant)தயார் செய்து பல மைல்கல் தூரத்திற்கு அதைக் கொண்டு செல்ல முடிந்தது.
அவர் டெஸ்லா சுருலையையும் உருவாக்கியுள்ளார், இது ரேடியோ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது. எக்ஸ்-ரே கதிர், டெஸ்லா சுருள் ஆகியவற்றில் இவர் செய்த கருவிகள் இன்றும் பயன்படுகின்றன.
ரிமோட் கண்ட்ரோல்:-
1898ம் ஆண்டு உலகிற்கு முதன்முதலாக ரிமோட் மூலம் கருவிகளை இயக்கிக் காட்ட முடியும் என நிரூபித்தார்.
ரோபோட்:-
இவர் கண்டுபிடித்த ரிமோட் கண்ட்ரோல் ரோபோ தான் உலகிலேயே முதல் ரோபோ என கௌரவிக்கப் பட்டு வருகிறது. இதனால், இவர் ‘ரோபோக்களின் தந்தை' எனவும் அழைக்கப் படுகிறார்.
எலக்ட்ரிக்
மோட்டார்ஸ்:
1888ல் தெஸ்லா, எலெக்ரிக் மோட்டார்களைக் கண்டு பிடித்தார். இதனைப் பொருத்தி கார்கள் வெற்றிகரமாக செயல் படுத்தப் பட்டன.
ரிமோட் கண்ட்ரோல்...
இன்று அமர்ந்த இடத்தில் இருந்தே, ரிமோட் கண்ட்ரோல் மூலம் அனைத்து மின்னணு பொருட்களையும் இயக்குகிறோமே, அதன் முன்னோடி இவர் தான். 1898ம் ஆண்டு உலகிற்கு முதன்முதலாக ரிமோட் மூலம் கருவிகளை இயக்கிக் காட்ட முடியும் என நிரூபித்தார்.

ரோபோட்:
சிந்திக்கும் ரோபோட், சாப்பிடும் ரோபோட் என நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக விதவிதமான ரோபோக்களைக் கண்டு பிடித்து வருகிறார்களே, அவை எல்லாவற்றிற்கும் பிள்ளையார் சுழி போட்டவர் தெஸ்லா தான். இவர் கண்டுபிடித்த ரிமோட் கண்ட்ரோல் ரோபோ தான் உலகிலேயே முதல் ரோபோ என கௌரவிக்கப் பட்டு வருகிறது. இதனால், இவர் ‘ரோபோக்களின் தந்தை' எனவும் அழைக்கப் படுகிறார்.

எலெக்ட்ரிக் மோட்டார்ஸ்:
1888ல் தெஸ்லா, எலெக்ரிக் மோட்டார்களைக் கண்டு பிடித்தார். இதனைப் பொருத்தி கார்கள் வெற்றிகரமாக செயல் படுத்தப் பட்டன.
ரேடியோ:-
தெஸ்லா கண்டு பிடித்ததிலேயே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது ரேடியோ தான். ஆனால், இத்தாலிய விஞ்ஞானியான மார்க்கோனி, வரலாற்றில் ரேடியோ கண்டுபிடித்தவர் என்ற பெயரைத் தட்டிச் சென்று விட்டார். ஆனால், உண்மையில் மார்க்கோனி, தெஸ்லாவின் 1901 ம் வருடத்து கண்டுபிடிப்பை ஆதாரமாக வைத்தே தனது ரேடியோவை உருவாக்கினார்.
நியான் லைட்டுகள்:-
நாம் இப்போது பார்க்கும் நியான் விளக்குகளை ஒத்த நியான் மற்றும் புளோரசண்ட் விளக்குகளை 1893லேயே கண்டு பிடித்தவர் தெஸ்லா.
உலகின் முதல் நீர்மின்சார நிலையத்தை உருவாக்கியதும் இவரே.
இவர் தான் ஈட்டிய பணத்தையெல்லாம் ஆய்வுகளிலேயே செலுத்தினார்.
இவரது காலத்து வரலாற்றாளர்கள் இவரை இயற்பியலின் தந்தை என்றும், "இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர்" என்றும், "தற்கால மின்னியலின் காப்பாளர்" என்றும் போற்றினார்கள்.
விருதுகள்:-
செயிண்ட் சேவாவின் வரிசை, இரண்டாம் வகுப்பு, செர்பியா அரசு (1892),
எலியட் க்ரஸன் பதக்கம் (1894),
பிரின்ஸ் டானிலோ I வரிசை (1895),
எடிசன் பதக்கம் (1916),
ஆணை ஆஃப் செயின்ட் சவா, I வகுப்பு, யூகோஸ்லாவியாவின் அரசு (1926),
யுகோஸ்லேவ் கிரீனின் வரிசை (1931),
ஜான் ஸ்காட் மெடல் (1934),
வெள்ளை ஈகிள் வரிசை, I வகுப்பு, யூகோஸ்லாவியாவின் அரசு (1936),
ஆர்க் ஆஃப் த ஒயிட் லயன், I வகுப்பு, செக்கோஸ்லோவாக்கிய அரசு (1937),
பாரிஸ் மெடல் பல்கலைக்கழகம் (1937),
பல்கேரியாவின் சோபியா, பல்கேரியா (1939)
இறப்பு:-
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் புரட்சிகரமான பங்களிப்பு வழங்கிய இவர்,
ஜனவரி-07, 1943 ஆம் ஆண்டு
நியூயார்கில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
எளிய மக்களுக்காக சிந்தித்த மின்சார யுகத்தின் தந்தையான இவரை நினைவுகூரும் விதமாக காந்தப்புல அலகு டெஸ்லா பெயரால் வழங்கப்படுகிறது
ஜனவரி-07. ரோபோட், உலகின் முதல் நீர்மின்சார நிலையத்தை உருவாக்கிய இயந்திரப்பொறியாளர், மின்பொறியாளர்-நிக்கோலா தெஸ்லா (Nikola Tesla) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:55
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:55
Rating: 5
Tags :
JANUARY


No comments: