Home
JANUARY
ஜனவரி-08 அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) ஆகிய ஆய்வுத்துறை கோட்பாட்டு இங்கிலாந்து இயற்பியலாளர்-ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) பிறந்த தினம்.
ஜனவரி-08 அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) ஆகிய ஆய்வுத்துறை கோட்பாட்டு இங்கிலாந்து இயற்பியலாளர்-ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) பிறந்த தினம்.
08:39
Read
இன்று பிறந்த நாள்:- ஜனவரி-08
அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) ஆகிய ஆய்வுத்துறை கோட்பாட்டு இங்கிலாந்து
இயற்பியலாளர்-ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்
(Stephen William Hawking) பிறந்த தினம்.
பிறப்பு:-
இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில்,ஜனவரி-08, 1942 ஆம் ஆண்டு
பிறந்தார். St Albans பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.பள்ளி பருவத்திலே
1958 இல், அவர்களது கணித ஆசிரியரின் உதவியுடன், கடிகாரத்தின்
பகுதிகள், பழைய தொலைபேசி ஒன்றின் மின்தொடர்பு இணைப்புப் பலகை, மற்றும் மீளுருவாக்கப் பாகங்களைக் கொண்டு ஒரு கணினியை நண்பர்களோடு உருவாக்கினார்கள்.
பிறகு 17 ஆவது வயதில், அக்டோபர் 1959 இல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை ஆரம்பித்தார்.
பின்னர், மார்ச் 1966 இல், செயல்முறைக் கணிதவியல், இயக்கவியல் கோட்பாடுகளில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். ஆம்யோட்ராஃபிக் லேடெரல் ஸ்கிலிராசிஸ் (Amyotrophic Lateral Sclerosis - ALS) என்ற தசை உருக்கி நோய் அவரைத் தாக்கி இருப்பது அவருடைய 21-ஆம் வயதில் கண்டறியப்பட்டது. மெல்ல மெல்ல உடலியக்கத்தையும், பேசும் திறனையும் பறிகொடுத்தார்.
கண்டுபிடிப்புகள்:-
இவருக்கு மரணம் நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். ஆனாலும், சக்கர நாற்காலியில் வலம் வந்தவாறு ஆய்வுகளைத் தொடங்கினார். கணினி பேச்சுத் தொகுப்பி மூலம் (Speech generating device) மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறார்.
இந்த நோய் அவரது உடலியக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக செயலிக்கச் செய்து வந்தாலும், ஆராய்ச்சிகள், எழுத்துப் பணிகள், பொதுவாழ்வு ஆகிய எதையுமே அவர் நிறுத்தவில்லை.
இறைவன் உலகைப் படைத்தான் என நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. சுவர்க்கம், நரகம் என்பதெல்லாம் தேவதைக் கதைகளில் வரும் கற்பனைகள்தான்’ என்ற இவரது இறையியல் கோட்பாடுகள் குறித்த கருத்துகள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன.
மேலும் அண்டவெளித் தோற்றத்தையும், அதன் பரிணாம வளர்ச்சியையும் பற்றி ஆராய்ந்து மகத்தான கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். அண்டவியலும், குவான்டம் ஈர்ப்பும் (quantum gravity) இவரது முக்கியமான ஆய்வுத்துறைகள்ஆகும். கருங்குழிகளுக்கும் (black holes), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.கருங்குழிகளிலிருந்து துகள்கள் வெளியேறுகின்றன என்பதைக் கண்டறிந்தார். இவ்வாறு வெளியேறும் துகள்களுக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயரிடப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப் எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986 இல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார்.
பணிகள்:-
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகள் கணிதப் பேராசிரியராக பணியாற்றினார்.
நூல்கள்:-
கருங்குழிகள் மற்றும் குழந்தைப் பிரபஞ்சங்களும், வேறு கட்டுரைகளும் (Black Holes and Baby Universes and Other Essays)- 1993,
ஏ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (A Brief History of Time)-1988,
தி யுனிவர்சல் இன் ஏ நட்ஷெல் ஆகிய இரண்டு புத்தகங்களும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
விருதுகள்:-
ஆடம்சு பர்சு- (1966),
எடிங்டன் பதக்கம்- (1975),
மாக்சுவெல் பதக்கமும் பரிசும்- (1976),
ஐன்மேன் பரிசு -(1976),
இயூசு பதக்கம் -(1976),
ஆல்பர்ட் ஐன்சுடைன், விருது -(1978)
அரச வானியல் கழகப் தங்கப் பதக்கம்- (1985),
திராக் பதக்கம் -(1987),
ஊல்ஃப் பர்சு- (1988),
கோலி பதக்கம்- (2006),
அடிப்படை இயற்பியல் பரிசு- (2012) போன்ற பதக்கம் பெற்றார்.
பதவிகள்:-
ராயல் சொசைட்டியின் உறுப்பினர் பதவி,
அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினர் பதவி வகித்தார்.
மறைவு:-
26 ஏப்ரல் 2007-இல், இவருக்கென்று வடிவமைக்கப்பட்ட
Boeing 727–200 தாரை வானூர்தியில்,
புளோரிடாவின்
கரையோரப் பகுதியில் எடையற்ற நிலையை அனுபவத்தில் கண்டார். மேலும்
ஜனவரி 8, 2007-இல் இவருடைய 65-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தான் விண்வெளிப் பயணம் செய்யப் போவதாக அறிவித்து நம்பிக்கையோடு இருந்த
இவர்,மார்ச்-14, 2018 ஆம் ஆண்டு, தனது 76 ஆவது வயதில் மரணமடைந்தார்.
ஜனவரி-08 அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) ஆகிய ஆய்வுத்துறை கோட்பாட்டு இங்கிலாந்து இயற்பியலாளர்-ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:39
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:39
Rating: 5
Tags :
JANUARY


No comments: