Home
JANUARY
ஜனவரி-08. ஒளிச்சேர்க்கை குறித்த ஆய்வுகளில் 'கால்வின் சுழற்சி'யைக் கண்டறிந்த அமெரிக்க உயிரி வேதியியலாளர்- மெல்வின் எல்லிஸ் கால்வின் (Melvin Ellis Calvin) மறைந்த தினம்.
ஜனவரி-08. ஒளிச்சேர்க்கை குறித்த ஆய்வுகளில் 'கால்வின் சுழற்சி'யைக் கண்டறிந்த அமெரிக்க உயிரி வேதியியலாளர்- மெல்வின் எல்லிஸ் கால்வின் (Melvin Ellis Calvin) மறைந்த தினம்.
08:43
Read
இன்று நினைவு நாள்:- ஜனவரி-08.
ஒளிச்சேர்க்கை குறித்த ஆய்வுகளில் 'கால்வின் சுழற்சி'யைக் கண்டறிந்த
அமெரிக்க உயிரி வேதியியலாளர்- மெல்வின் எல்லிஸ் கால்வின் (Melvin Ellis Calvin) மறைந்த தினம்.
பிறப்பு:-
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம் செயின்ட் பால் நகரில் ஏப்ரல்-08, 1911 ஆம் ஆண்டு பிறந்தார்.
பிறகு இவரது குடும்பம் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகருக்குச் சென்று குடியேறியது. பள்ளியில் படிக்கும்போதே அறிவியலில், குறிப்பாக வேதியியல் மற்றும் இயற்பியலில் இவருக்கு ஆர்வம் பிறந்தது.
மிச்சிகன் சுரங்கத் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற்று சேர்ந்தார். அங்கு வேதியியல், கனிமவியல்,
புவி அமைப்பியல், தொல்லுயிர் படிம உயிரியல், சிவில் பொறியியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1931ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். 1935 ஆம் ஆண்டு மினசோட்டா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் PH. D பட்டம் பெற்றார்.
ஆராய்ச்சிகள்:-
ராக்ஃபெல்லர் அறக்கட்டளை மானிய உதவியுடன் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஹாலோஜன்களின் எலக்ட்ரான் நாட்டம் (Affinity of Halogens) என்பது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரையுடன் பயணம் தொடங்கியது.
மரபியல் மூலக்கூறுகள், கரிமச் சேர்மங்களின் நிறம், இயற்கை மூலக்கூறுகளின் எலக்ட்ரான் அமைப்பு ஆகியவை குறித்து ஆராய்ந்தார்.
ஆண்ட்ரூ பென்சன், ஜேம்ஸ் பாஷம் ஆகியோருடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
ஒளிச்சேர்க்கையின்போது தாவரத்துக்குள் கார்பன் பயணிக்கும் பாதையை இந்த மூவர் குழு கண்டறிந்தது. இதற்கு ‘கால்வின் சுழற்சி’ என்று பெயரிடப்பட்டது.
நூல்கள்:-
இவர் தனது ஆராய்ச்சிகள் குறித்து 600-க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள், 7 புத்தகங்களை எழுதியுள்ளார்.
Calvin wrote an three decades later titled Following the Trail of Light:
A Scientific Odyssey.
பணிகள்:-
1937 இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
1947-ல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.
பதவிகள்:-
பல கல்வி நிறுவனங்களில் விசிட்டிங் புரொபசராகப் பணிபுரிந்தார். பல்கலைக்கழகத்தின் பல்வேறு வேதியியல் துறைகளின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
லண்டன் ராயல் சொசைட்டி உள்ளிட்ட கவுரவம் மிக்க அறிவியல் அமைப்புகளின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1958 ஆம் ஆண்டு ராயல் நெதர்லாந்தின் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸின் வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1959 ஆம் ஆண்டில் அவர் ஜெர்மன் லியோபோல்டினாவின் ஜேர்மன் அகாடமியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விருதுகள்:-
ஒளிச்சேர்க்கை குறித்த ஆராய்ச்சிக்காக கால்வின்,ஆண்ட்ரூ பென்சான் (Andrew Benson) மற்றும் ஜேம்ஸ் பேஷாம் (James Bassham) ஆகியோருடன் இணைந்து 1961இல் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
டேவி மெடல்- (1964),
ப்ரீஸ்ட்லி பதக்கம்- (1978),
ஏஐசி தங்க பதக்கம்- (1979),
நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ்- (1989) போன்ற விருதுகளை பெற்றார்.
இறப்பு:-
இவர் 1980-ல் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றபோதிலும், அதற்குப் பிறகு 16 ஆண்டுகள் வரை தன் குழுவினருடன் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த இவர், ஜனவரி -08, 1997 ஆம் ஆண்டு, மரணமடைந்தார்.
ஜனவரி-08. ஒளிச்சேர்க்கை குறித்த ஆய்வுகளில் 'கால்வின் சுழற்சி'யைக் கண்டறிந்த அமெரிக்க உயிரி வேதியியலாளர்- மெல்வின் எல்லிஸ் கால்வின் (Melvin Ellis Calvin) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:43
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:43
Rating: 5
Tags :
JANUARY


No comments: