Breaking

ஜனவரி-08 பெண்டுலம் விதியைக் கண்டறிந்த இத்தாலிய கணிதவியலாளர், வானியல் நிபுணர், தத்துவவாதி-கலிலியோ கலிலி (Galileo Galilei) மறைந்த தினம்.



இன்று நினைவு நாள்:- ஜனவரி-08

பெண்டுலம் விதியைக் கண்டறிந்த 
இத்தாலிய கணிதவியலாளர், வானியல் நிபுணர், தத்துவவாதி-கலிலியோ கலிலி (Galileo Galilei) மறைந்த தினம்.

பிறப்பு:-

பிப்ரவரி-15, 1564 ஆம் ஆண்டு, பைசா, இத்தாலியில் பிறந்தார். கமல்டோலெசு துறவியர் மடத்தில் கல்வி கற்றார்.
சிறு வயதிலேயே எதையும் மிக நுணுக்கமாக கவனிக்கும் திறன் பெற்றவர். ஆண்களுக்கு 32 பற்கள், பெண்களுக்கு 28 பற்கள்’ என்று அரிஸ்டாட்டில் கூறியதாக பள்ளியில் சொல்லிக்கொடுத்தார்கள். பின்னர் இவர் தன் அம்மா, பக்கத்து வீட்டுப் பெண்களின் பற்களையும், சில ஆண்களின் பற்களையும் எண்ணிப் பார்த்தார். அரிஸ்டாட்டில் சொன்னது தவறு இருவருக்குமே 32 பற்கள்தான் என்று தெளிவுபடுத்தியவராவார். பிறகு பைசா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார்.

இளம் வயது ஆய்வுகள்:-

1581 இல், அவர் மருத்துவம் படிக்கும்போது, ஒரு நாள், வளியோட்டங்கள் பெரிய, சிறிய அலைவுகளில் சரவிளக்கை தனி ஊசல் போல ஆடவைப்பதை கவனித்தார். தன்னுடைய இதயத்துடிப்பை வைத்துப்பார்க்கும்போது அந்த சரவிளக்கு பெரிய அலைவிலும் சிறிய அலைவிலும் ஓரலைவை ஒரே நேரம் எடுத்துக் கொள்வதைப் பார்த்தார். தனது வீட்டிற்கு திரும்பியதும் இரண்டு ஒரே நீளம் கொண்ட தனி ஊசல்களை வெவ்வேறு அளவில் அலையவிட்டுப் பார்க்கும்போது அவை இரண்டும் ஒரே நேர அளவில் அலைவதைக் கவனித்தார். இதன் பிறகுதான் கிறித்தியன் ஐகன்சு இந்த நெறிமுறையைப் பயன்படுத்தி ஒரு துல்லியமான கடிகாரத்தை உருவாக்கினார். 1586 இல் நீரியல் துலாவை 
(ஹைட்ரோஸ்டாடிக் பாலன்ஸ் கருவியைக்) 
கண்டறிந்தார்.மேலும் பெண்டுலம் விதியைக் வரையருத்தார்.




பணிகள்:-

1589 இல், பைசா நகரப் பல்கலைக்கழகத்தின் கணிதபாட பேராசிரியராக பணியாற்றினார்.
1592 இல், கலிலியோ படுவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1610 வரை அங்கு வடிவியல், இயக்கவியல், வானியல் ஆகிய துறைகளில் கல்வி பயிற்றுவித்தார்.

கண்டுபிடிப்புகள்:-

3-ம் நூற்றாண்டில்  முதன்முதலாகப் புவி சூரியனைச் சுற்றிவருகிறது என்று தன் கோட்பாட்டை முன்வைத்தார்.

1593 இல் கலிலியோ ஒரு வெப்பமானி உருவாக்கினார். 
1595 மற்றும் 1598 க்கு இடையில், கலிலியோ ஒரு வடிவவியல் மற்றும் இராணுவ திசைகாட்டியை உருவாக்கினார். 


1609 ஆம் ஆண்டு ஆகஸ்ட்-21 ஆம் நாள் வெனிஸ் மலை நகரில்,கேம்நைல் குன்றில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் தொலைநோக்கியை நிறுவினார்.அந்த லென்ஸ் 3x உருப்பெருக்கம் திறனில் உருவாக்கினார்.
அண்டவெளியில் காணும் பொருட்கள், சந்திரனின் பரப்பில் காணும் மலைகள், 
நிலாவின் டாப்பலாஜிக்கல் வரைபடங்களை போன்றவற்றை டெலஸ்கோப் மூலம் வரைந்தார். 
கோள்களைப் பற்றிய பல கோட்பாடுகளை இந்த ஆராய்ச்சிகள் தகர்த்தன.
மேலும் சூரியனின் கரும்புள்ளிகளை கவனித்த முதல் ஐரோப்பியர் ஆவார்.
வெள்ளி, சனி, மற்றும் நெப்டியூன் போன்ற கோள்களை பற்றியும் ஆராய்ச்சி செய்தார்.
1610-ம் ஆண்டு ஜனவரியில் இவர்  கண்டுபிடித்த தொலைநோக்கிகள் மூலம் இவர் வியாழனின் துணைக்கோள்களைக் கண்டறிந்தார்.


கலிலியோ ஒரு பொருள் விழும் போது அது வெற்றிடத்தில் விழுந்தால் அது சீரான வேகமாற்றத்துடன் விழும் என்று அனுமானித்திருந்தார். மேலும் ஓய்வில் இருந்து ஆரம்பித்து சீரான வேகவளர்ச்சியில் செல்லும் ஒரு பொருளுக்கான இயக்கவியல் விதியை (d ∝ t 2) கலிலியோ சரியாக கணித்திருந்தார்.
சைட்ரஸ் நுன்சியஸ் (விண்மீன்கள் தூதன்) என்ற தலைப்பில் ஒரு சிறிய ஆய்வு கட்டுரையில் மார்ச் 1610 இல் தனது ஆரம்ப தொலைநோக்கி வானியல் ஆய்வுகளை வெளியிட்டார்.

நூல்கள்:-

தி டயலாக் ஆஃப் தி டூ பிரின்சிபல் சிஸ்டம் ஆஃப் தி வேர்ல்டு’ என்ற புத்தகம்,
புதிய அறிவியல் மீதான உரையாடல்-1631,
உலகின் இரு முக்கிய கோட்பாடுகள்-1632,


மறைவு:-

நோக்கு வானியலின் தந்தை, நவீன இயற்பியலின் தந்தை,நவீன அறிவியலின் தந்தை என்று அழைக்கப்பட்ட இவர், ஜனவரி-08, 1642 ஆம் ஆண்டு
ஆர்செட்ரி, இத்தாலியில் மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களைக் கண்டுபிடித்ததால், அவரை பெருமைப்படுத்தும் வகையில் கலிலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன.

No comments:

Powered by Blogger.