1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்
கொய்யாவில் வைட்டமின் சி மூன்று மடங்கு உள்ளது. இது அல்சர் வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த மருந்து ஆகும்.
கொய்யாவை அப்படியே கடித்து சாப்பிடுவதால் பற்கள், மற்றும் ஈறுகளுக்கு சிறந்த மருந்து ஆகும்.
இரவில் தூங்குவதற்கு முன் கொய்யாவை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் தீர்ந்துவிடும்.
கொய்யா இலையை நன்கு கொதிக்கவைத்து காயம் இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் காயம் விரைவில் குணமடையும்.
ஒருவயதிற்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கொய்யாக்காயை நறுக்கி சாப்பிடக்கொடுக்கலாம். இது குழந்தைகளின் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு சிறந்த பலன் தரும்.
குடல் புண், புளித்த ஏப்பம், போன்ற வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் கொய்யா சாப்பிடுவதால் தீர்ந்துவிடும்.


No comments: