சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள மணி ஓசையை கேட்டால் ஒருவரின் ஆயுளில் 12 வினாடிகள் அதிகமாகும்...
தமிழகத்தின் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள மணி ஓசையை கேட்டால்
ஒருவரின் ஆயுளில் 12 வினாடிகள் அதிகமாகும்...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள தில்லை நடராஜர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இதற்கு அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல் அம்சங்களுடன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இக்கோவில் கட்டப்பட்டு இருப்பதும் காரணம்.
பல கோடிகளை செலவு செய்து, பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து உலக ஆராய்ச்சியாளர்கள் பலர், இங்கு வீற்றிருக்கும் நடராஜரின் கால் பெருவிரல் தான் பூமியின் காந்த புள்ளி மையம் என கண்டறிந்து இருக்கும் நிலையில்,
எந்தவித நவீன கருவிகள் இன்றியும் இதனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் கண்டறிந்த நம் முன்னோரின் திறனை எப்படி சொல்வது? இது மட்டுமல்லாது, பஞ்ச பூத கோவில்களான, காளகஸ்தி, ஏகாம்பரேஸ்வர் கோவில்கள், இந்த சிதம்பர நடராஜர் ஆலயத்துடன் ஒரே நேர்கோட்டில் சரியாக 79 டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்திருக்கும் அதிசயமும் அறிவியலாளர்களால் வியந்து பேசப்பட்டு வருகிறது.
இவ்வளவு பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் அமைந்துள்ள, சிகண்டி பூரணம் மணியும் வியக்கத்தக்க சக்திகளை கொண்டிருக்கிறது. உலகிலேயே மிக சிறந்த மணியாக கருதப்படும் சிகண்டி பூரண ஒலி, எளிதில் ஒருவரை தியான நிலைக்கு ஆழ்த்தி விடுகிறது.
இப்படியொரு மணி உலகில் எங்குமே இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், இதன் தெய்வீக ஓசையை கேட்டால், ஒருவரின் ஆயுளில் 12 வினாடிகள் அதிகமாகும் எனவும் கூறப்படுகிறது.


No comments: