Breaking

ஜனவரி-16 கொரில்லாக்கள் குறித்த ஆய்வுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த அமெரிக்க வனவிலங்கு ஆய்வாளர், டயேன் ஃபாசி பிறந்த தினம்.

இன்று பிறந்த நாள்:ஜனவரி-16
கொரில்லாக்கள் குறித்த ஆய்வுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த அமெரிக்க வனவிலங்கு ஆய்வாளர், டயேன் ஃபாசி பிறந்த தினம்.

🦍 *அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் (1932) பிறந்தார். பெற்றோர் பிரிந்ததால், தாயிடம் வளர்ந்தார்.*

🦍  *அறிவுக்கூர்மை மிக்க மாணவியாகத் திகழ்ந்தார். 6 வயதில் குதிரை ஏற்றம் கற்றார்.*

🦍  *விலங்குகளிடம் மிகுந்த பற்று கொண்டிருந்தார்.*
*மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவமனையின் இயக்குநராகப் பணியாற்றினார்.அப்போது, பண்ணை முதலாளிகளின் வேண்டுகோளால், அவர்களது* விலங்குகளைப் பராமரிக்கும் *பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.* 

🦍 *உலகில் உள்ள எண்ணற்ற* வன விலங்குகள் பற்றி *தெரிந்துகொள்ளும் ஆர்வம் உண்டானது.*

🦍 *ஆப்பிரிக்கா சென்றார். டாக்டர் லூயிஸ் லீக்கி வழிகாட்டுதலின்படி,* மலை கொரில்லாக்கள் *குறித்த நீண்டகால களஆய்வுப் பணியைத் தொடங்கினார்.*

🦍 *காங்கோ ஆராய்ச்சித் திட்டத்துக்காக* ‘நேஷனல் ஜியாகிரபிக் சொசைட்டி’, ‘வில்கி பிரதர்ஸ் பவுண்டேஷன்’ *ஆகியவற்றின் நிதியுதவியுடன் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். பின்னர், அதில் இருந்து விலகி ருவாண்டா சென்றார்.*

🦍 *அங்குள்ள விருங்கா மலைப் பகுதியில் ஆய்வு மையம் நிறுவினார். சுமார் 10,000 அடி உயரத்தில் உள்ள மலைப் பகுதிகளில் பல ஆண்டுகள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டார்.* 

🦍 *அங்கு பல சவால்களை எதிர்த்துப் போராடினார். மலைப் பிரதேச* கொரில்லாக்களைப் பாதுகாக்கும் *நோக்கில் இவர் மேற்கொண்ட பணிகளை உலகமே வியந்து பாராட்டியது.*

🦍 ‘பீனட்ஸ்’ *என்று பெயரிட்டு அழைத்துவந்த ஒரு கொரில்லா தயக்கமின்றி இவரது கையைத் தொட்டது.*

🦍 *கொரில்லா - மனித தொடர்புகளிலேயே அமைதியாக நடந்த முதல் ஸ்பரிசமாக இது பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பல கொரில்லாக்களும் இவருடன் நெருங்கிப் பழகின.*

🦍 *இவரது ஆராய்ச்சிகளால், கொரில்லா குறித்த ஏராளமான பல புதிய தகவல்கள் கிடைத்தன.* ‘டிஜிட்’ *என்று இவர் பெயரிட்டு அழைத்த சிறு கொரில்லா கொலை செய்யப்பட்டதால், விரக்தி அடைந்தார். பின்னர், கொரில்லாக்களின் பாதுகாப்புக்கு நிதியுதவி செய்ய* ‘டிஜிட் ஃபண்ட்’ *என்ற அமைப்பை தொடங்கினார்.*

🦍 *கொரில்லாக்களுடன் நெருங்கிப் பழகி ஏராளமான ஆய்வுகள் மேற்கொண்டார். பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார். அவை நேஷனல் ஜியாகிரஃபிக் இதழில் வெளியாகின.* 

🦍 *வனவிலங்கு, குறிப்பாக மலைப்பகுதி கொரில்லாக்களின் பாதுகாப்புக்காக 20 ஆண்டுகளுக்கு மேல் பாடுபட்டார்.*

🦍 ‘கொரில்லாஸ் இன் தி மிஸ்ட்’ *என்ற நூலை வெளியிட்டார். இது உலக அளவில் விற்பனையில் சாதனை படைத்தது. இப்புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமும் வெற்றி பெற்று, இவருக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்தது.*

🦍 *கொரில்லாக்கள் குறித்த ஆய்வுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த டயேன் ஃபாசி 1985-ல் 53 வயதில் கொலை செய்யப்பட்டார். இறந்துபோகிற, கொல்லப்படுகிற கொரில்லாக்களுக்காக ருவாண்டாவில் இவர் கட்டிய நினைவிடத்தில்,* ‘டிஜிட்’ கொரில்லாவின் சமாதிக்கு *அருகிலேயே இவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.*
🦍🦍🦍🦍🦍🦍🦍🦍🦍

No comments:

Powered by Blogger.