ஜனவரி-20. சந்திரனில் இறங்கிய இரண்டாவது நபர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின் பிறந்த தினம்.
இன்று பிறந்த நாள்:- ஜனவரி-20.
சந்திரனில் இறங்கிய இரண்டாவது நபர் எட்வின் யூஜின் ஆல்ட்ரின் பிறந்த தினம்.
பஸ் ஆல்ட்ரி்ன் என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
விஞ்ஞானப் பட்டதாரியான ஆல்ட்றின் 1951 இல் அமெரிக்க வான்படையில் இணைந்தார். கொரியப் போரில் போர் விமானியாகப் பங்கு பற்றினார். பின்னர் மசாசுசெட்ஸ் தொழிநுட்பக் கல்லூரியில் வானியலில் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் அமெரிக்க வான்படையில் இணைந்து பணியாற்றினார்.
அக்டோபர் 1963 இல் நாசாவினால் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜூலை 16, 1969 இல் அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் சந்திரனை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார். சரியாக 02:56 UTC ஜூலை 21 (இரவு 10:56 EDT, ஜூலை 20), 1969இல், ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார்.
அல்ட்ரினால் எடுக்கப்பட்ட சந்திரத்தரையில் அவரது காலடியின் புகைப்படம்., ஜூலை 20, 1969.
"பஸ்" (Buzz) என்ற பெயரிலேயே அவர் பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். 1988இல் இவர் தனது பெயரை "பஸ் ஆல்ட்ரின்" என அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டார்.


No comments: