Breaking

ஜோஹன் கிரெகார் மெண்டல்.1822 – 1884. அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்

🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜
*Ⓚ.ⒿⒶⓎⒶⓈⒺⒺⓁⒶⓃ*
🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜

இன்று அறிவியல் அறிஞர்:
ஜோஹன் கிரெகார் மெண்டல்.*
*1822 – 1884.*

🥜  *பிழைப்பிற்காக ஒரு தொழிலைச் செய்தாலும் கிடைத்த ஓய்வு* *நேரத்தை பயன்படுத்தி* 
*அற்புதச்* *சாதனைகளைப் படைத்தவர்களின் வரிசையைச் சேர்ந்தவர் இவர்.* 

🥜 *மரபு வழி*
*பற்றிய அடிப்படைக்* *கொள்கையைக் கண்டுபிடித்தவர்.* 

🥜 *இவர் அன்று* *அம்சங்கள் என்று*
*அழைத்ததை நாம் இன்று மரபணுக்கள் என்று அழைக்கிறோம்.* 

🍡 *உயிரியல் துறையில்*
சார்லஸ் டார்வினுக்கு *அடுத்தபடியாக பல முக்கிய உண்மைகளைக்* *கண்டறிந்த* 
*விஞ்ஞானி இவர்.*

🍡 *1822-ஆம் ஆண்டு* *செக்கோஸ்லாவாக்கியாவில் ஒரு சாதாரண விவசாயக்* *குடும்பத்தில்*
*பிறந்தவர்.*

🍡 *படித்ததோ மதகுருவிற்கான சமயக் கல்வி. கிரேக்கம், அரேபியம், இலத்தீன்*
*போன்ற பல்வேறு மொழிகளில் புலமை பெற்றவர்.* 

🍡 *சிறுவயது முதலே தாவரவியலில்*
*நாட்டம் கொண்டவராக இருந்தார்.* 

🍡 *சில வருடங்கள் பாதிரியராகப்* *பணியாற்றியபின் ஆசிரியர் தொழிலை மேற்கொண்டார்.*

🍡 *பிறகு, தாமே முயன்று தாவரவியல், விலங்கியல், புவியியல்* *ஆகியவற்றை*
*உள்ளடக்கிய இயற்கை* *அறிவியலை நன்கு கற்றறிந்தார்.*

🍡 *தன் ஆராய்ச்சிக்கு கிரெகார் மெண்டல் பட்டாணிச் செடியைத் தேர்ந்தெடுத்தார்.
*காரணம், அச்செடிக்கு அயல் மகரந்தச் சேர்க்கை கிடையாது என்பதே.

🍡 34 வகை பட்டாணிகளை வாங்கி அவற்றின் மறுஉற்பத்தி பற்றிய ஆய்வை மேற்கொண்டார்.

🍡 அதோடு மட்டுமின்றி, 21,000-க்கு மேற்பட்ட செடிகளில் அவரது ஆய்வுகள் தொடர்ந்தன.

🍡 தேனீக்களிலும் எலிகளிலும் கலப்பின் பரிசோதனைகளை செய்தார்.

🍡 வெப்பநிலை,வாயுமண்டல அழுத்தம் மற்றும் ஈரப்பதம் பற்றிய ஆய்வுகளும் அவரது பரிசோதனைகளில் அடங்கும்.

🍡 படைப்புக் கொள்கைக்கு மாற்றாக இவரது கலப்பின் ஆராய்ச்சி இருந்த்தாகக்
கருதிய மதவாதிகள் இவரை எதிர்த்து வந்தனர்.

🍡 உயிரியல் ஆராய்ச்சியின் மையக்கருவாகஅமைந்துள்ள ‘ மெண்டல் கோட்பாடு ‘  எனப்படும் பாரம்பரியம் பற்றிய கண்டுபிடிப்பை உலகிற்கு அளித்த மாமேதையாக அவர் இன்று கருதப்படுகிறார்.

🍡 சுமார் 35 ஆண்டுகள் இவரது கண்டுபிடிப்புகள் கவனிப்பாரற்றுக் கிடந்தன. இவர் இறந்து 16 ஆண்டுகளுக்குப்பின் 1900-இல் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் இவரது கண்டுபிடிப்புகளின் பெருமையினை அறிந்து இவர் ஓர் ஒப்பற்ற அறிஞர் என்பதை
உலகிற்குத் தெரிவித்தார்கள்.
🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜

🥜🥜🥜🥜🥜🥜🥜🥜🥜

No comments:

Powered by Blogger.